Home இலங்கை கோப்பாயில் ஊரடங்கை மீறி வீதிகளில் நடமாடிய 50 பேர் கைது

கோப்பாயில் ஊரடங்கை மீறி வீதிகளில் நடமாடிய 50 பேர் கைது

by admin

கோப்பாய் காவல்நிலைய பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடினர் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் உரிய அனுமதி இன்றி ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கைதானவர்கள் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் காவல்துறையினர்  மேலும் தெரிவித்தனர்.  #கோப்பாய் #ஊரடங்கு  #கைது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More