Home உலகம்பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 596 பேர் பலி – மொத்த மரணங்கள் 16,060…

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 596 பேர் பலி – மொத்த மரணங்கள் 16,060…

by admin

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 596 பேர் பலியாகி  உள்ளதாக தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. இந்த நிலையில்  பிரித்தானியாவில்  இதுவரை பலியாணவர்களின்  எண்ணிக்கை  16,060 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக புதிதாக  இனம்காணப்பட்ட 5,850 பேருடன், பிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்   எண்ணிக்கை 120,067 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த பல நாட்களில் நிலவிய அதிகரித்த  மரணங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஏற்பட்டுள்ள மரணங்களில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், முடக்க நிலை பயணளிக்க 4 வாரங்கள் ஆகும் எனவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும்  பிரித்தானியாவில் கொண்டுவரப்பட்ட முடக்க நிலைக் கட்டுப்பாடுகள், எதிர்வரும் மாதங்களில் தளர்வுக்கு கொண்டுவரப்படுமானால், கொரோனா தொற்று பேரளவில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என மற்றுமொரு சாரார் எச்சரித்தும் உள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More