பனிமலை தோட்டம்
பச்சை படர்ந்த தேயிலை
ரயில் பெட்டி போல்
தொடர் வீடுகள்
பயணிகள் ஏறியும் புறப்படாத
லயன்கள் காட்சியளிக்க
அன்றும் இன்றும்
மனதை உலுக்கிய உண்மை……
மேல் மலையில் கால் சறுக்கி
தவறி வீழ்ந்தும் இறந்தனர்
இயற்கை அனர்த்த பிடியில்
மண்மூடியும் மடிந்தனர்
அன்றும் இன்றும்
மனதை உலுக்கிய உண்மை……
ஓய்வு கிடைக்கா உழைப்பில்
காலம் தோறும் உழைத்தும்
உழைப்புக்கு ஏற்ற வேதனம்
கையில் எட்டாது
நீங்காத வறுமையில் வரண்டும்
போன வாழ்க்கை
அன்றும் இன்றும்
மனதை உலுக்கிய உண்மை……
தோட்ட தொழிலாளி உழைப்பு
சுரண்டும் பித்தலாட்டக் கூட்டத்திற்கே?
தொடர்கதையாய் தொடர்கின்றது
அன்றும் இன்றும்
மனதை உலுக்கிய உண்மை……
மரணிக்கப்படா சட்டங்கள்
மனசாட்சி இல்லா
இலாப நோக்கு
வாழ்நாளெல்லாம்
நலமும் வளமும் கூட
சாத்தியமோ?
அன்றும் இன்றும்
மனதை உலுக்கிய உண்மை……
சகாயராஜா புஸ்பலதா
கிழக்குப் பல்கலைக்கழகம்ரூபவ்
இலங்கை.