Home இலங்கைமக்களுக்கான உதவிப் பணிகளில் ஈடுபட்ட இலங்கநாதன் செந்தூரன், கடற்கரையில் சடலமாக்கப்பட்டாரா?

மக்களுக்கான உதவிப் பணிகளில் ஈடுபட்ட இலங்கநாதன் செந்தூரன், கடற்கரையில் சடலமாக்கப்பட்டாரா?

by admin
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரான 37 வயதுடைய இலங்கநாதன் செந்தூரன் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரை. நேற்றையதினம் வெள்ளிக்கிழமை மாலை முதல் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். அந்நிலையில், அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டமனாறு இந்து மயானத்துக்கு அருகாமையில் நேற்றிரவு மீட்கப்பட்டிருந்தன.
சம்பவத்தையடுத்து வல்வெட்டித்துறை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். அத்துடன் ,  உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்
இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை தொண்டமனாறு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்ட நிலையில் காவற்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் செந்தூரன் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://globaltamilnews.net/2020/141507/
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More