Home இலங்கைஇலங்கையில், 95 கடற்படையினருக்கு கொரோனா – முப்படையினரின் விடுமுறைகள் ரத்து…

இலங்கையில், 95 கடற்படையினருக்கு கொரோனா – முப்படையினரின் விடுமுறைகள் ரத்து…

by admin


இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் 68 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 27 பேரும் விடுமுறைக்காக சென்று இருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முப்படையினரின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை ரத்து

முப்படையில் உள்ள அனைத்து அணிகளினதும் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது விடுமுறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிற அணிகள் உடனடியாக அந்தந்த முகாம்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுப்பில் உள்ள அதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் உடனடியாக முகாமின் தலைவர் அல்லது பொறுப்பான அதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மேலதிக ஆலோசனையைப் பெற வேண்டும்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More