Home இலங்கைதந்தை செல்வாவின் 43ஆவது நினைவுதினம்

தந்தை செல்வாவின் 43ஆவது நினைவுதினம்

by admin

தந்தை செல்வாவின் 43ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில்  நினைவுகூரப்பட்டது. யாழ்ப்பாணம் நகரில் அமைத்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

தந்தை செல்வா என அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் 43ஆவது நினைவு தினம் நேற்றுமுன்தினம் 26ஆம் திகதியாகும். எனினும் நாட்டு சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்தமையால் இன்று நினைவுத் தூபியில் நினைவுகூரப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய பொறுப்பதிகாரி, தந்தை செல்வா நினைவாலயத்துக்கு முன்பாக வந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தியதுடன், ஒவ்வொருவராக அஞ்சலி செலுத்த அனுமதித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஜானம், யாழ் மாநகர முதல்வர் இ.ஆனல்ட், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். #தந்தைசெல்வா #நினைவுதினம்

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More