Home இலங்கைகிழக்கில் 11 பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன

கிழக்கில் 11 பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன

by admin


கிழக்கு மாகாணத்தில் 11 பாடசாலைகள், கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்றபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்முனைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் திருமலைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் அம்பாறைப் பிராந்தியத்தில் 03 பாடசாலைகளும் இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்டு இவ்வாறு தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்முனைப் பிராந்தியத்தில், கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, நாவிதன்வெளி வேப்பையடி கலைமகள் வித்தியாலயம், அக்கரைப்பற்று சென் ஜோன்ஸ் வித்தியாலயம், பாணமை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய 04 பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்றப்படுகின்றன.

திருகோணமலைப் பிராந்தியத்தில், மூதூர் இலங்கைத்துறை முகத்துவாரம் பாடசாலை, ரொட்டவேவ முஸ்லிம் வித்தியாலயம், மொறவேவ சிங்கள மகா வித்தியாலயம், புல்மோட்டை கனிஜாவலி சிங்கள மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் முகாம்களாக மாற்றப்படுகின்றன

மேலும் அம்பாறைப் பிராந்தியத்தில், பொத்துவில் பாணமை மகா வித்தியாலயம், உகன ஹிமிதுறவ வித்தியாலயம், உகன கலகிட்டியாகொட மகா வித்தியாலயம் ஆகிய 03 பாடசாலைகளே தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்றப்படுகின்றன

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்திக் கண்காணிப்பதற்காக இப்பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுன்றது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இவ்வாறு தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்றப்படும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. வடக்கில் கோப்பாய் தேசிய ஆசிரியர் கல்லூரி, முல்லைத்தீவு முத்தையன் கட்டுப்பகுதி ஆகியவற்றில் நேற்றையதினம் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதிலும் ராணுவம் அவற்றினை கையேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #கிழக்கில்  #பாடசாலைகள்  #தனிமைப்படுத்தல்  #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More