மன்னார் நகர சபை பிரிவில் ஊரடங்குச் சட்ட நிலைமையை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வந்த சட்ட விரோத கட்டுமான பணிகளை மன்னார் நகர சபை இடை நிறுத்தியுள்ளது.
மன்னார் நகர சபைக்கு உற்பட்ட மூர்வீதி பகுதியில் உள்ள கற்றல் வள நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பகுதியில் நகர சபையிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் , பல வருடங்களாக மன்னார் நகர சபையால் நிர்மாணப்பணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிர்மாண பணியானது ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி மீண்டும் அமைக்கப்பட்ட நிலையில் மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் நகர சபை குறித்த கட்டுமான பணியை உடனடியாக நிறுத்தியுள்ளது.
போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் அரச தொடர்பாடல் மின் கம்பம் ஒன்றையும் அக்காணிக்குள் வைத்து சுற்று மதில் எழுப்பப்பட்டுள்ளதாகவும் அப்பகுதிகளில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதனால் ஏற்கனவே கட்டப்பட்ட கட்டுமான பகுதிகளை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தி தறுமாறு மூர் வீதி பொது மக்கள் நகர சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் குறித்த கட்டுமாண பனியுடன் தொடர்பு பட்ட நபர் அதே பகுதியில் இன்னும் ஒரு கட்டுமானப் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும் ஆனாலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சுகாதார நடை முறைகளை பின் பற்றாமல் உரிய அனுமதி பெறாமலும் கட்டுமான பனியில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி உடனடியாக கவனம் செலுத்தி கட்டுமான பணிகளை நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறித்த பணியினை முன்னெடுப்பவர் கல்வி துறையில் கடமையாற்றும் அதிகாரியும்,சமாதான நீதவானகவும் உள்ள நிலையில் சட்ட விரோத செயல்பாடு குறித்து பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.இவ்விடையம் தொடர்பாக மன்னார் நகர சபை தலைவரை வினவிய போது,,
-மன்னார் நகர சபையிடம் எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளாமல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கட்டுமான பணிக்கு மன்னார் நகர சபை தடை விதித்துள்ளது.என தெரிவித்தார். #ஊரடங்கை #சட்ட விரோத #இடைநிறுத்தம்