Home இலங்கைசிசுவை மண்ணுக்குள் புதைத்த ஆணும் பெண்ணும் கைது

சிசுவை மண்ணுக்குள் புதைத்த ஆணும் பெண்ணும் கைது

by admin
இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் காவல்துறையினரால் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணின் கருவில் வளர்ந்த சிசுவை குறை மாதத்தில் நாவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் அகற்றப்பட்டுள்ளது. அந்த சிசுவை அவர்கள் விடுதியின் முற்றத்தில் வெட்டிப் புதைத்துள்ளனர்.  யாழ்ப்பாணம் காவல்துறைபுலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இணுவில் – மருதனார்மடத்தில் உள்ள குறித்த  விடுதிக்குச் சென்ற காவல்துறையினர், இருவரையும் கைது செய்தனர்.
கொக்குவிலையைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணும் உடுவிலைச் சேர்ந்த 20 வயதுடைய ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அந்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.
இதன்போது பெண் கருவுற்று சில மாதங்களாகிய நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் சட்டத்துக்குப் புறம்பாக சிசு அகற்றப்பட்டுள்ளது. அந்தச் சிசு விடுதியின் முற்றத்தில் புதைக்கப்பட்டுள்ளது.
சிசு புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிவானின் உத்தரவைப் பெற்று அதனை மீட்பதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் சுன்னாகம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.    #சிசு  #கைது
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More