அரசியல் பிச்சைக்கு அரங்கேற்றம்
நோயாளிகலெல்லாம்
அகதிகளாய் திண்டாட்டம்.
தளர்ந்து போன ஊரடங்கு
சந்தர்ப்பவாத அரசியலை
அறைகூவத்தான்.
சாராயப் போத்தலுக்கும்
சத்தமில்லாமல் கொடுத்த காசுக்கும்
வாக்குகளை வாங்கிப்பழகிய
அரசியல் பிச்சைக்காரனுக்கு…
அடித்ததுபார்
மெகா அதிர்ஷ்டம்
ஊழஎனை-19 ஆக…
ஐந்தாயிரமும் பத்தாயிரமும்
சமூர்த்தியாக கொடுத்து
அரசு ஓட்டு வாங்கிவிட்டது.
அது கடனா?
நம்மீது கொண்ட நலனா?
என்பதன் உண்மை நிலை
இன்னும் தெரியாது.
இது போதாதென்று
உலர் உணவுப் பொதி சுமந்து
சுயட்சைகளும் சுத்துகிறது.
இடது கையின்
அந்த சின்னவிரல்தான்
அரசின் நோக்கு
அதற்காக ஊரடங்கு தளர்வதுதான்
இன்றைய போக்கு.
தளர்ந்து போன மறுநாளே
ஊழஎனை-19 உச்ச எண்ணிக்கையை
பதித்தது
ஊடகங்களில்
அரசியல் வெடியும் வெடித்தது.
மீண்டும் இன்று அதிகாலை
பக்தி கீதங்களையும்
பயான் சிந்தனையையும்
கத்தித் தீர்த்த ஒலி பெருக்கிகள்
யாரும் வெளியேறாதீர்கள்
என்று கொட்டித்தீர்க்கிறது.
செவிடன் காதில்
ஊதிய சங்கு போல்
புலமையாளர்களின் எதிர்வுகூறல்கள்
கேளிக்கையாகிவிட்டது.
கைவிரல் போட்டியை
மூட்டை கட்டாவிட்டால்
பிணக்குவியல் மூட்டைகள்தான்
வாக்குப்பதிவாகும்.
எஞ்சியிருக்கும்
கிராமங்களையாச்சும்
கிரமமாக காக்க
வர்ணச் சால்வைகளிலும்
வார்த்தை மாயாஜாலத்திலும்
அரசியல் பேசுவோர்
உயிர்களின் மதிப்பை உணரவேண்டும்
இது இனவாத யுத்தமில்லை
என்பதையறிந்து.
த.நிறோஜன்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.