Home இலங்கைகாவல்துறையினருக்கெதிராக முறைப்பாடுகள்

காவல்துறையினருக்கெதிராக முறைப்பாடுகள்

by admin

யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 20ஆம் திகதியிலிருந்து இன்று மே முதலாம் திகதிவரை காவல்துறையினருக்கெதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து இன்று மே முதலாம் திகதிவரை 16 முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றில் 9 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிராவை. கோப்பாய், சாவகச்சேரி வட்டுக்கோட்டை மற்றும் பருத்தித்துறை காவல்துறையினரு;கு எதிராகவே முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அத்தோடு ராணுவத்துக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவை ஆனையிறவு இராணுவ சோதனை சாவடி படையினர் தொடர்பாகவும் மற்றையது பூநகரி பகுதியில் மீன் பிடிக்க சென்றவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக கிடைக்கப் பெற்றுள்ளன. ஏனைய முறைப்பாடுகள் சமுர்த்தி நிவாரணம் வழங்கல் தொடர்பில் அதிகாரிகள் மீதான முறைப்பாடுகள் பொதுமக்களால் பதியப்பட்டிருக்கின்றது.

காவல்துறையினருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு வடக்கு மாகாண பிரதி காவல்துறை மா அதிபர், மாவட்ட பிரதி n காவல்துறைமா அதிபர், மூத்த காவல்துறை அத்தியட்சகர் மற்றும் அந்தந்த காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளன’ என மேலும் தெரிவித்தார். #காவல்துறை  #முறைப்பாடுகள்  #ஊரடங்கு  #மனிதஉரிமைகள்ஆணைக்குழு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More