Home உலகம்பொதுவெளியில் தோன்றிய வடகொரிய தலைவர் 

பொதுவெளியில் தோன்றிய வடகொரிய தலைவர் 

by admin

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு என்ன நடந்தது என்பது குறித்து உலக நாடுகள் பல்வேறுறு கருத்துகளை முன்வைத்து வந்துள்ள நிலையில் 20 நாட்களின் பின்னர் அவர் நேற்று முதல் தடவையாக பொது வெளியில் தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளாரென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரிய தலைவர்; இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானதன் பின்னர் அவர் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. அவர் இவ்வாறு பொது வெளியில் தோன்றாமையால் அவர் உடல்நிலை குறித்து ஊடகங்கள் பல சந்தேகங்களை வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது #வடகொரிய  #கிம்ஜோங்உன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More