Home இலங்கை உள்ளூர் உற்பத்தியும் அதன் மறைமுக காலனீயமும்… மு.அரிதரன்.

உள்ளூர் உற்பத்தியும் அதன் மறைமுக காலனீயமும்… மு.அரிதரன்.

by admin

மனிதர்கள் இயற்கையிலே தோன்றி, இயற்கைக்கு இசைவாக்கப்பட்டு, இயற்கையினூடே வாழ்ந்து படிப்படியாக தலைப்பட்டு வந்த காலத்திலிருந்து இற்றைவரை இயற்கைநேயத்துடன் வாழ்கின்றனரா? என்ற கேள்விக்கு விடையாகத்தான் இயற்கை தன் வலிமையை கொரோனா வைரஸ் ஊடாக காட்டிக் கொண்டுடிருக்கின்றது. இதுவரை காலமும் மனிதர்களிடையே எழுந்த யுத்தங்கள் பற்றி சொல்லத்தேவையில்லை. அதன் தொடராகவே தற்கால உலக நிலையினை பகுத்துணர முடிகின்றது. மறைமுகமாக வல்லரசுகளின் வர்த்தகப் போர் என்று கூட கிசுகிசுப்புக்கள் எட்டிப் பார்க்கின்றன. ஆயினும் உலத்தின் சடுதியான ஓட்டத்தினை தலைகீழான தன்மையில் உருட்டிப் போட்டிருக்கிறது கொரோனா. நாளுக்கு நாள் கொத்துக் கொத்தாக மனிதர்களை மடித்துக்கொண்டிருக்கிறது. போக்குவரத்து, பொருளாதார நடவடிக்கை என்ற தொடரில் அனைத்தும் முடக்கப்பட்டு மனிதர்கள் வீடுகளிலே இருக்கும் ஊரடங்கு நிலையும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் வழமைக்கு மாறான நிலையில் அன்றாடம் பெற்றுக்கொள்ள முடிந்த விடயங்களைப் நடைமுறையில் பெற்றுக்கொள்ள கடினமான இக் கட்டத்திலேயே உள்ளூர் உற்பத்திகளின் பெறுதியை உணர முடிகிறது. தற்சமயம் பாரம்பரியமான உள்ளூர் நடவடிக்கைகளை அதிகப்படுத்தி முன்னோக்கி நகர்த்துவதற்கான வாய்ப்புக்களும் கிட்டியுள்ளன. எனவேதான் உள்ளூர் உற்பத்திகளை அதிகமாக முன்னெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும், உள்ளூர் பயிர்ச்செய்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றெல்லாம் ஒருசாரார் பேசிக்கொண்டிருக்க மறுபக்கத்தில் ஏதோ ஒரு வகையில் கிடைக்கும் வளத்தைக்கொண்டு உள்ளூர் உற்பத்திகளும் நடைபெறுகின்றன. ஆயினும் அவற்றிலுள்ள நடைமுறைச் சிக்கல்;கள் பற்றி சிந்தித்தல் அவசியமாகின்றமை காலத்தின் தேவை.

தற்போதைய கொரோனா கடுங்காலத்தில் உணவினை மட்டும் பெற்றுக்கொண்டு வீட்டிலிருப்பதே மிகப் பொருத்தமானது என்ற மனநிலை அனைவரிடத்திலும் வலுப்பெற்றுள்ளது. எனவேதான் உள்ளூ10ர் உற்பத்தி உணவுகளை அதிகம் நுகர்வதற்கான தேவைப்பாடு உருவெடுத்துள்ளது. உள்ளூ10ர் உற்பத்திகளில் உள்ளூ10ர் பயிர்ச்செய்கை முறைமை இத்தருணத்தில் மிக முக்கியம் பெறுகின்றது. அவ்வுற்பத்தியினை முன்னெடுப்பதற்கு தேவையான மூல வளத்தில்தான் சிக்கல் இருக்கின்றது. பயிர்ச்செய்கை விதை மற்றும் இரசாயனப் பாவனை போன்றவை அடங்கலாக மறைமுகமான (காலனீயத் தாக்கம்) மற்றும் நேரடியான பல சிக்கல்கள் பாரம்பரிய உள்ளூ10ர் உற்பத்திகளை ஆட்கொண்டுள்ளன. விதைகளானது பயிர்ச்செய்கையின் நிலையான மூலாதாரம். எனவே நடைமுறையிலுள்ள உள்ளூர் உற்பத்திக்கான விதைப்பாவனை பற்றி அழுத்தமாகப் பாரக்கவேண்டியுள்ளது. சுதேச உள்ளூர் விவசாயத்தில் பயன்பாட்டிலிருந்த பாரம்பரிய விதையினங்கள் காணாமல்போயிருக்கிறது. காரணம் பல்தேசியக் கம்பனிகளின் ஆதிக்கமன்றி வேறில்லை.

பொதுவில் விதையினங்களை மூன்றாகப் பிரிக்கலாம். அவை பாரம்பரிய விதைகள், கலப்பின விதைகள், மரபணு மாற்று விதைகள் எனப்படும். பாரம்பரிய விதைகள் என்பன காலங்காலமாக விவசாயிகளால் பயிரிடப்பட்டுவரும் விதையினங்களாகும். கலப்பின விதையானது வௌ;வேறு தன்மையுடைய ஒரேயின விதைகளை கலப்புச் செய்து அதிக விளைச்சலுக்காக புதிய இனத்தினை உருவாக்க தயாரிக்கப்படும் விதையாகும், மரபணு மாற்று விதைகளானது ஒரு பயிரினதும் இன்னுமொரு நுண்ணுயிரியினதும் மரபணுவை இணைத்து உருவாக்கப்படுபவையாகும். (thozhil parmprojacts.com)  கலப்பின மற்றும் மரபணு விதைகளைத் தயாரிக்கும் பல்தேசியக் கம்பனிகளானது வீரியமான, தரமான விதைகள் இவைகள் என்று விவசாயிகளிடம் சிபாரிசு செய்து ,புதிய விதையினங்களை அறிமுகப்படுத்தி, திட்டமிட்டு பாரம்பரிய விதையினங்களின் செல்வாக்கினை விவசாயிகளிடம் குறைத்துள்ளனர். அரசாங்கமும் பல்தேசியக் கம்பனிகளுக்குச் சார்பான விதத்தில் விவசாயத் திட்டங்களை உருவாக்கி அதனூடாக புதிய விதையினங்களை விவசாய நடவடிக்கைக்கு சிபாரிசு செய்வதனைக் காணக்கூடிதாக இருக்கின்றது. தற்போதைய காலத்தில் பெரும்பான்மையாக கலப்பின விதையினங்களினையே விவசாயிகள் பயிரிடும் சூழலை தமது விதைப்பரவலாக்க ஆதிக்கத்தினால் பல்தேசியக்கம்பனிகள் உருவாக்கியுள்ளன.

இவ்வாதிக்க நிலைமைக்கும், பாரம்பரிய உள்ளூர் பயிர்ச்செய்கை உற்பத்தி நடவடிக்கைக்கும் இடைவெளி ஒன்று உள்ளது. அது உள்ளூர் உற்பத்திக்கான சவாலும் கூட. கலப்பின விதைகளினைப் பயிரிடுவதற்கு விவசாயிகள் பழக்கப்பட்டிருப்பதனால் இத்தகைய விதைப்பயன்பாடு முறையே நடைமுறையிலுள்ளது. இந்த நடைமுறையால் அப்பயிரிலிருந்து பெறப்படும் விதையினை மீண்டும் பயிரிட முடியாத நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் பல்தேசியக் கம்பனிகளின் விதை உற்பத்தியாளர்கள் விதைகளினை உற்பத்தி செய்யும்போது உயிரியல் கலப்பாக்க முறைகளின் மூலம் முதல் போகம் தவிர்ந்து அடுத்த போகங்களிற்கு அதிக விளைச்சலை கொடுக்காத வண்ணம் விதையில் அதற்குரிய மரபணுவை (Gene) நீக்குகின்றனர். (2009 ஆம் ஆண்டு சர்வதேச உயிரியல் இதழில் வெளிவந்த மரபணு நீக்கம்,மரபணு மாற்றம் தொடர்பான ஆய்வு முடிவுகள் கூறுகின்றன). இதனால் அடுத்தடுத்த போகங்களிற்கு புதிய விதைகளையே வாங்கி பயிரிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளூர் பயிர்ச்செய்கை உற்பத்தியில் அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியப் பயிர்கள், மரக்கறிப் பயிர்கள், நெற்பயிர்ச் செய்கைகள் அனைத்திலும் கலப்பின விதைகளின் செல்வாக்கு உள்ளது. கொரோனா தீவிர நிலையால் சில வகையான பயிர் விதைகளைப் பெற்றுக்கொள்ள இயலாமையினால் அப்பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.

திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் அதிகம் சோளன் செய்கையினை உள்ளூர் மக்கள் அன்றாட சீவனோபாயமாக பயிரிடுகின்றனர். சோளன் விதைகள் தற்போதைய சூழலில் இறக்குமதி செய்யப்படாமையினால் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதால் சோளன் செய்கை நிலங்கள் பயிரின்றிக் காட்சியளிக்கின்றது. பாரம்பரியமான விதைப்பாவனை இருந்திருந்தால் இத்தகைய துர்ப்பாக்கிய நிலையினை தவிர்த்திருக்க முடியும். கொரோனா போன்ற வேறு அனர்த்தங்கள் ஏற்பட்டால் அல்லது இந்நிலவரம் தொடர்ந்தால் இத்துர்ப்பாக்கிய நிலை மேலும் தீவிரமடையாது என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது. இது குறித்து உள்ளூர் விவசாயி ஒருவர் கூறுகிறார் ‘அந்த நேரத்தில ஒரு போகம் விதச்சா அடுத்தடுத்த போகத்துக்கு அதுல இருந்தே விதய எடுப்பம். ஆனா இப்ப நாட்டுற பயிரில எங்க விதய எடுக்கிற. விதய அவனுகளுட்டான் காசு குடுத்து வாங்குற நெலமயா இருக்கு.’ இதுபோல் இன்னும் பல பாரதூரமான தீங்குதரும் விளைவுகளும் உள்ளன. புதிய கலப்பாக்க மற்றும் மரபணு மாற்று விதையினங்கள் வீரிய விதைகளென்று அறிமுகம் செய்யப்பட்டன. உண்மையில் அவ் விதைகள் வீரியம் என்ற சொற் பதத்திற்கு மாறான பண்புடையன. அவ் விதைகளுக்கு வரட்சியைத் தாங்குகின்ற திறன்கள் குறைவு, நோயினை எதிர்த்து விளையும் ஆற்றல் மிகக் குறைவு, அவற்றிலிருந்து பெறப்படும் விதைகள் பெரும்பாலும் மீண்டும் முளைக்காது. அவ்வாறு முளைத்தால் முன்னைய விளைச்சலை விட மிகக் குறைவான விளைச்சலையே கொடுக்கும். புதிய விதைகளை அதிக பணம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் (1மப கலப்பின சோள விலையின் விலை 1300 ரூபா) மேலும் மரபணு மாற்று விதைகளில் நுண்ணுயிரி ஒன்றின் மரபணுவைப் புகுத்தும்போது பயிரிலே பூச்சிகளுக்கு எதிராக விசத்தன்மையை உருவாக்கும் தொழிநுட்பம் ஒன்றைப் பயன்படுத்துகிறார்கள். அந்த விசத்தன்மை பயிர் வளர்ந்த பின்பும் அதிலிருக்கும். இதனை உண்பதால் அதிகம் உடல்நலக்கேடுகள் ஏற்படுவதாக சமூக அக்கறையுள்ள மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக கல்லீரல், சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

மற்றும் இரசாயன உரம்,பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தியே விளைச்சலைப் பெறவேண்டியிருக்கும். இதனால் இரசாயனத்தில் தங்கியிருந்து பயிர் செய்ய வேண்டிய நிலையுள்ளதால் நாளுக்கு நாள் விவசாயச் செலவு அதிகரிக்கும். இரசாயனப் பயன்பாட்டால் உற்பத்தியில் நச்சுத்தன்மையின் அளவு அதிகமாகும். இதை உண்பதனாலும் உடலியல் கேடுகள் உண்டாகும், இரசாயனம் மண்ணில் கலப்பதனால் விவசாயத்திற்கு நன்மை பயக்கும் மண்புழு போன்ற நுண்ணுயிர்கள் அழிவடைகின்றன. அதுபோல் கிருமிநாசினி பாவனையால் பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை உண்டு பயிர்களுக்கு நன்மை பயக்கும் பூச்சிகளும் அழிவடைகின்றது. இதனால் உயிர்ப் பல்வகைமையில் பாதிப்பு ஏற்படுகின்றது. மண் செழிப்பற்றதாகி சில காலத்திற்கு பின் பயிர் விளையாத அளவிற்கு மலட்டுத்தன்மை பெறுகின்ற அளவிற்கு மண்ணின் இயல்பை இரசாயனங்கள் மாற்றியமைக்கின்றன. மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீரில் இரசாயனங்கள் கலப்பதால் பாவனைக்கு உதவாது பாதுகாப்பற்றதாகிவிடுகிறது. இது குறித்து இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஆய்வு செய்து இத்தகைய முடிவுகளை வெளியிட்டிருக்கின்றனர். இவற்றின் தொகுப்பு நூலாகவும் வெளியாகியுள்ளது. இது பற்றி கொழும்புப் பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் டரீனா ருஸைக் என்பவரும் தனது ஆய்வுக் கட்டுரையில் விளக்கமளித்துள்ளார். இவ்வாறு கலப்பின மற்றும் மரபணு மாற்று பயிர்ச்செய்கை உற்பத்தி முறைகள் தற்போது உள்ளூர் பயிர்ச்செய்கை மரபுகளையும் மாற்றத்திற்கு உள்ளாக்கி ஆட்கொண்டிருக்கிறன.

இவற்றிற்கு மாறாக உள்ளூர் பாரம்பரிய இயற்கை விவசாயம் எவ்வளவு சாத்தியமான குணமுடையதாயுள்ளன. பாரம்பரிய விதைகளைப் பயன்பத்தி பயிரிடப்படும் பயிர்கள் மண்ணிற்கு ஏற்ப பொருந்தி விளைபவை. வரட்சிக்கு ஈடுகொடுத்து வளரும் பண்பு கொண்டவை. இவை நோய்த் தாக்கத்திற்கு எளிதாக உள்ளாகாது. மீண்டும் மீண்டும் பயிரிடக்கூடிய வகையில் இவ் விதைகள் தரமான முளைதிறன் மற்றும் விளைதிறன் கொண்டவை. உழவர்களின் கட்டுக்குள் இருந்து முறையான விளைச்சலையும் ஆரோக்கியமான உணவையும் தரவல்லன. மேலும் இயற்கை விவசாயத்தினால் மண்ணின் தரமும் கட்டமைப்பும் பாதுகாக்கப்படும். இயற்கை சேதனப் பசளைப் பாவனையால் இரசாயன நச்சுத்தன்மைகள் இல்லாத வளமான, ஆரோக்கியமான, தூய்மையான உற்பத்திகளை பொருட்களைப் பெறமுடியும், உற்பத்திப் பொருட்களின் ஆயுள் அதிகம், காய்கறி, பழங்கள் என்றவாறு அனைத்து உற்பத்திகளையும் தரமாகவும் அதிக சுவையாகவும் உற்பத்தியாக்க முடியும், நன்னீர் வளம் இரசாயனக் கலப்பின்றித் தூய்iமாகப் பாதுகாக்கப்படும் அதேவேளை சூழல் சமநிலை பேணப்படும். விதைகள் மற்றும் இயற்கை உரம் என்றவாறு பாரம்பரிய முறையுடைய இயற்கை விவசாயத்தின் மூலம் அனைத்து வளமும் இயற்கையாகக் கிடைப்பதனால் செலவினைக் குறைத்து செழுமையான விளைச்சலைப் பெறமுடியும், பாரம்பரியமான அரிசி, தானிய வகைகளில் புரதச்சத்து, நாற்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் அவற்றை அன்றாட உணவாக உட்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உடலுக்குக் கிடைக்கிறது. இவற்றை உண்டதால்தான் நம் முன்னோர்கள் வயதாகியும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதோடு நீண்ட ஆயுட்காலத்துடன் வாழ்கின்றனர்.

இத்தகைய நற்பயன்களைத் தருகின்ற இயற்கை விவசாயம் பற்றிய பிரச்சார உரைகள் மற்றும் களப்பணிகள் மூலம் நிரூபனமாகக் கூறியுள்ளார் இயற்கை விஞ்ஞானி முனைவர் கோ.நம்மாழ்வார். தற்போதைய காலத்தில் நவீனமுறை விவசாத்தினால் மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படும் கேடுகளைக் கருத்திற்கொண்டு இயற்கை விவசாயத்திலே பெரும்பாலும் அனேக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக செயற்கை இரசாயனங்களை விடுத்து முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்திற்கு முக்கிய இடம் கொடுக்கும் இந்தியாவின் சிக்கிம் மாநிலம் உலகின் முதல் இயற்கை விவசாய மாநிலம் என ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இம் மாநிலத்திற்கு தங்க விருது வழங்கி கௌரவித்தாக வெளியான செய்தியை கடந்த ஆண்டிற்கு முன்னைய ஆண்டில் அறிந்துள்ளோம். கடந்த 16 ஆண்டுகள் தொடக்கம் இற்றை வரைக்கும் அம் மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக இயற்கை விவசாயத்தினையே முன்னெடுத்துவருகிறது.ஓர் உயிர் உருவாகிய சூழலில்தான் அது வாழ வேண்டும். ஏனெனில் பௌதீக இயற்கை சூழமைவுகளுக்கு இசைவாகத்தான் அவ்வுயிரின் மூலக்கூறுகள் இயற்கையாகவே உருவாகும். அதில் மானிட ஆதிக்கத்தால் மாற்ற முயற்சி செய்தால் கொரோனா போல் தீங்கான விளைவுதான் தோன்றும். அன் நிலைதான் இயற்கை விவசாயத்திற்கும் ஏற்பட்டுள்ளது. எனவே நாம் உள்ள10ர் பயிர்ச்செய்கை உற்பத்தியை இயற்கை முறையில் செய்கை பண்ணுதல் அவசியம். முதலில் பாரம்பரிய விதைகளினை நடுதலில் இருந்து ஆரம்பித்து இயற்கை விவசாய நடைமுறைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

ஆனால் பாரம்பரிய விதையினங்கள் தற்காலத்தில் வெகுவாக மருவியுள்ளது. கத்தரி, சோளம், மிளகாய்;, கச்சான், நெல்….. என்ற தொடரில் பல வகையான பயிர்களிலும் பாரம்பரிய விதையினங்களின் பாவனை மிகமிகக் குறைந்துள்ளது. அதிலும் சில இனங்கள் அழிந்தே போய்விட்டது. எடுத்துக்காட்டாக நெல்லினத்தில் முத்துச்சம்பா, பச்சைப்பெருமாள், மலைக்கறுப்பன், சீனட்டி, முருங்ககாயன், இலங்கையன் முத்துக்கறுப்பன், பனங்களி, சீரகச்சம்பா போன்ற பல இனங்கள் பாவனையில் இருந்து அருகிப் போயிருக்கிறன. இந்நெல்லினங்கள் மருத்துவப் பெறுமதியுடையதாகவுள்ளன. சுதேச வைத்தியர்கள் இவற்றினை வௌ;வேறு மூலிகை மருத்துவ முறைகளுக்குள் உள்வாங்குகின்றனர். இத்தகைய நற்குணங்கள் மிகைப்பெற்ற தன்மைகள் இவற்றுள் இருந்தன. (கண்ணொறுவையிலுள்ள தாவர மரபணு வள மையம் இலங்கையின் பாரம்பரிய நெல்லினங்களாக 2442 இனங்களைப் பட்டியற்படுத்தியுள்ளது.)

‘கொத்தைப் போல வித்தைப் பேணு’ என்ற பழமொழியை எமது முன்னோர் பாரம்பரிய அறிவியலோடும் தூரநோக்கோடும் கூறியுள்ளனர் என்பது இப்போது புரிகிறது. அவ் விதைப் பாரம்பரியம் தற்போது எங்கே? பன்நாட்டு பல்தேசியக் கம்பனிகள் தங்கள் சுய இலாபத்துக்காகவும் விற்பனைச் சந்தைப்படுத்தல் உத்திகளாலும் புதிய விதையினங்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியதை நம்பி பாரம்பரிய விதைகளை விசாயிகள் கைவிட்டுள்ளனர். மேலும் பாரம்பரிய விதையினங்களின் தாற்பரியமும் இபுதிய விதையினத்தின் தீங்குகளும் பற்றிய விளக்கம் விவசாயிகளுக்கு குறைவாகவே இருந்தது. அரசின் விவசாய விரிவாக்கல் திட்டங்கள் அனைத்தும் பாரம்பரிய விதையினங்களின் பயன்பாட்டினை ஊக்குவிப்பதாக இருக்கவில்லைஇ பெரும்பான்மையான விவசாயிகள் உள்ள10ர் விதைகளை சேகரித்து பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்தவில்லை. இதனால் படிப்படியாக பாரம்பரிய விதையினங்கள் பல அழிவுற்றுள்ளன. சில அழிவுறும் நிலையிலுள்ளது.

வரலாற்றின் தொடர்காலப் போக்கிலே எப்போதும் மேலாதிக்க அதிகார வர்க்கமானது அடிநிலை மக்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதிக்கத்தில் அல்லது அடிமை நிலையில் வைத்துக்கொண்டிருக்கும். தற்போது அவ் ஆதிக்கவாதம் விதையைக் கூட விட்டுவைக்கவில்லை. கொரோனா அனர்த்தம் ஏற்பட்டதால் சில விதைகளைப் பெற இயலாத நிலையில்தான் இவ் விதை அரசியல் பற்றி சிந்திக்க வேண்டுமென்றில்லை. குறிப்பிட்ட கடந்தகாலம் தொட்டு தற்போது வரை இந்நிலையுள்ளதை விவசாயிகள் மாத்திரமல்ல அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் விவசாய திணைக்களத்தின் நடமுறையான விவசாயத் திட்டங்கள் இயற்கை விவசாயச்சார்புடையதாக பெரும்பாலும் அமையவில்லை, விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் திறன்களைக் கட்டியெழுப்புதல், கடன் வசதிகளை ஏற்படுத்துதல், உற்பத்தி மற்றும் சந்தைக் கட்டமைப்புக்களை மேம்படுத்துதல், நவீன விவசாயத் தொழிநுட்ப செயன்முறைகளை விருத்தி செய்தல் என்றவாறே அரசாங்கத்தின் விவசாயத் தி;ட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் நவீனமுறை விவசாயத்தினை மேம்படுத்துபவையாகவே இருக்கிறது. இத்திட்டங்கள் மூலமாக எம்மிடம் இருந்த பாரம்பரியமான இயற்கை விவசாய நடைமுறையை மேம்படுத்தலுக்கான கொள்கைகள் கடுகளவை விட குறைவாகவே முன்னெடுக்கப்படுவது இத்திட்டங்களின் பாரிய குறைபாடாகவே எண்ண முடிகிறது. தற்போதைய கொரோனா காலத்திலும் விவசாய திணைக்களம் ஒவ்வொரு பிரதேசங்களிலும் விவசாய உத்தியோகத்தர்கள் ஊடாக வீட்டுத்தோட்டம் செய்வதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு சிறு அளவில் பயிர் விதைகளும் வழங்கப்பட்டுள்ளது. அவ்விதைகள10ம் கலப்பின விதையினங்களே. இதன் மூலமே அரசாங்கத்தின் தற்போதைய விவசாய நடைமுறை புரிகிறது. பல்கலைக்கழகங்களை எடுத்துக்கொண்டாலும் இது பற்றிய முன்னெடுப்புக்கள் மிகக்குறைவே. விவசாய பீடங்களில் விவசாயம் பற்றிக் கற்றல், நடைமுறைகளை அறிதல் என்பன ஒருபுறம் இருக்க விவசாய முறைமை சார்ந்த தற்கால சமூக இயங்கியலில் எத்தகு நிலைமை இருக்கிறது என்பது தொடர்பான பகுப்பாய்வுகள் மூலமாக சமூக அக்கறையான செயற்பாடுகள் மற்றும் துலங்கல்களை வெளிப்படுத்துவதற்கான களம் பல்கலைக்கழகங்களில் உள்ளது. இக்களத்தினை விவசாய பீடத்தினர் தற்போதைய விவசாய நிலைப்பட்டைக் கருத்திற் கொண்டு இயற்கை விவசாயம் பற்றிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவருகின்றனர் என்று அழுத்தமாக கூற முடியாத அளவிற்கு அவர்களின் முன்னெடுபபுக்கள் இருக்கிறது. பல்கலைக்கழகங்களும் இது தொடர்பான ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளல் அவசியம்.

சுயச்சார்பு உள்ளூர் உற்பத்திகளை இயற்கை முறை பொறிமுறைகளைக் கொண்டு உற்பத்தி செய்தால் விதை,உரம் என்று எந்தக் கம்பனியிலும் தங்கிநின்று உற்பத்திகளை மேற்கொள்ளாத சூழலைத் தோற்றுவிக்கலாம். எனவே தற்போது உள்ளூ10ர் விதைகளைப் சேகரித்துப் பாதுகாத்து மற்றும் இயற்கை முறையில் உள்ளூர் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டிலுள்ளோம். கூட்டுறவு நடைமுறை மற்றும் ஏனைய இளைஞர் கழகங்கள் ,பெண்கள் அமைப்புக்கள், உள்ளூர் கலை மன்றங்கள் ஊடாக இது பற்றிய விழிப்புணர்வுகளை மேற்கொண்டு, எங்கோவொரு மூலையில் இன்னும் பயன்பாட்டிலுள்ள உள்ளூர் விதைகளைச் சேகரித்து, சுயசார்பு விதைப்பாரம்பரியத்தை கட்டமைத்து இது பற்றி விவசாயிகளுக்கு மேலும் விளக்கமளிக்க வேண்டும். இதன் மூலமாக விவசாய கூட்டுறவு முறையொன்றினை உருவாக்கி பாரம்பரிய பொறிமுறையில் பயிர்களை ஆளுகை செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கி பாரம்பரிய விதையினங்களை விவசாயிகளுக்கு சிபாரிசு செய்ய வேண்டும். இதனடிப்படையில் உள்ள10ர் உற்பத்திகளை தரமான உள்ளூர் உற்பத்திகளாக மீள் கட்டுருவாக்கி எப்போதும் வேறு எவரிலும் தங்கியிருக்காத தற்சார்பு உள்ளூர் உற்பத்திப் பொருளாதார முறையினை நடைமுறையாக்க வேண்டிய தேவை இப்போதுள்ளதும், இனி வருகின்ற காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

மு.அரிதரன்
சு.வி.அ.க நிறுவகம்,
கிழக்குப் பல்பலைக்கழகம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More