Home இலங்கைஐயாயிரம் கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்கப்படும் :

ஐயாயிரம் கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்கப்படும் :

by admin

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் பேரில் உரித்தாகும் ரூபா ஐயாயிரம் கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்கப்படும்  என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  மே மாத கொடுப்பனவு வழங்கும் பணிகள் நாளை ஆரம்பமாவதுடன்வெசக் பௌர்ணமி தினத்திற்கு முன்னர் வழங்கி முடிக்கப்படும். வயோதிபர்கள்அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்காக மார்ச் மாதம் முதல் நபர் ஒருவருக்கு ரூபா ஐயாயிரம் வீதம் வழங்குவதற்கு ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டது.

இக்குழுவினருக்கான மூல ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களைப் போன்றே காத்திருப்பவர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் கொடுப்பனவுகள் உரித்தாகும். மே மாதத்திற்கான ஓய்வூதியம் வழங்குதல் நாளை ஆரம்பமாகி பௌர்ணமி தினத்திற்கு முன்னர் நிறைவுசெய்யப்படும். #ஓய்வூதியம்    #கொடுப்பனவு #பௌர்ணமி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More