இந்த நிலையில் பல வருடங்களாக கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழாலையைச் சேர்ந்த ஒருவர் மாவட்ட புலனாய்வுப் பிரவினரால் கைது செய்யப்பட்டார். அந்தச் சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் மற்றொரு குற்றச்சாட்டில் சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒருவரும் இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என கோப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அத்துடன், கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபரிடமிருந்து கோடாரி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன என்று காவல்துறையினர்தெரிவித்தனர். #கொள்ளை #கைது #கோப்பாய்