Home இலங்கைகொள்ளை சந்தேகநபர்கள் கைது

கொள்ளை சந்தேகநபர்கள் கைது

by admin
கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நீர்வேலியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் மூன்று வீடுகளில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டமை மற்றும் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவம் கடந்த முதலாம் திகதி அதிகாலை இடம்பெற்றது.
இரண்டு வீடுகளுக்குள் புகுந்த கும்பல் அங்குள்ளவர்களை தாக்கியும் அச்சுறுத்தியும் கொள்ளையில் ஈடுபட்டது என்று தெரிவிக்கப்பட்டது. ஒரு வீட்டில் 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணமும் மற்றொரு வீட்டில் 2 பவுண் எடையுடைய சங்கிலிகள் இரண்டும் கொள்ளையிடப்பட்டதுடன் மூன்றாவது வீட்டில் துவிச்சக்கர வண்டி திருடப்பட்டது. முகமூடி அணிந்து வாள்களுடன் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலே ஊரடங்கு வேளையில் இந்த துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது என்று முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் மற்றும் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்கரின் கீழான மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் என இரண்டு பிரிவுகளாக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் பல வருடங்களாக கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழாலையைச் சேர்ந்த ஒருவர் மாவட்ட புலனாய்வுப் பிரவினரால் கைது செய்யப்பட்டார். அந்தச் சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் மற்றொரு குற்றச்சாட்டில் சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒருவரும் இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என கோப்பாய்  காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அத்துடன், கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பெண்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபரிடமிருந்து கோடாரி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன என்று காவல்துறையினர்தெரிவித்தனர். #கொள்ளை  #கைது #கோப்பாய்

 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More