Home உலகம்பிரித்தானியாவில் வெளிநாட்டு பயணிகளை, சுய தனிமைப்படுத்த திட்டம்?

பிரித்தானியாவில் வெளிநாட்டு பயணிகளை, சுய தனிமைப்படுத்த திட்டம்?

by admin


அயர்லாந்தை தவிர்த்து ஏனைய நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகளை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பு தங்களிடம் தெரிவித்துள்ளதாக பிரித்தானிய விமான சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த புதிய விதிமுறை இந்த மாதத்தின் இறுதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன் மூலம், வெளிநாடுகளிருந்து பிரித்தானியாவுக்குள் நுழைபவர்கள் 14 நாட்களுக்கு கட்டாய சுய தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More