உலகம் பிரதான செய்திகள்

கொரோனா வைரஸ் ஒருபோதும் அழியாமல் போகலாம்


கொரோனா வைரஸ் ஒருபோதும் அழியாமல் போகலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக்கான இயக்குநர் மைக் ரயான் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

நேற்று புதன்கிழமை ஜெனீவாவில் காணொளி வாயிலாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பதை கணிக்கும் முயற்சிகளுக்கு எதிரான கருத்தை வெளியிட்டுள்ள அவர் ஒருவேளை கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டாலும், அந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ‘பெரும் முயற்சிகள்’ தேவைப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  போதுமான அளவுகளை உற்பத்தி செய்வதற்கும், அவற்றை உலகளவில் விநியோகிப்பதற்கும் தீவிர முயற்சி தேவைப்படும். எனவே நீண்ட காலம் இந்த வைரஸ் இருக்கலாம்.

நமது சமூகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பரவி வரும் உட்பரவு வைரஸ்களில் ஒன்றாக கொரோனா வைரஸ் மாறலாம் எனவும் இது முற்றிலும் அழிய கூடிய நிலையை அடையாமல் போகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எச்.ஐ.வி. அழிக்கப்படவில்லை; ஆனால், அந்த வைரஸை கட்டுப்படுத்தும் வழிகளை நாம் கண்டறிந்துள்ளோம்; அNதுபோன்று கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பதனை கணிப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது #கொரோனா  #அழியாமல்  #உலகசுகாதாரநிறுவனம் #தடுப்பூசி

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link