என் அம்மா
என்னோடு உனக்கு எட்டு
என்னால் பிடித்தது உனக்கு பித்து
என் அம்மா
கூடப்பிறந்த ஏழ்மையிலும்
நீ ஈன்றெடுத்த செல்வம்
உனக்கு தாழ்மையல்ல
என் அம்மா
தந்தையவன் குடிகாரன்
இருந்ததையெல்லாம் தின்றழித்த சதிகாரன்
என்றாலும் உன் கணவன் என்று போற்றுவாயே
என் அம்மா
பாசத்தினிலும் உனக்கு நிகர் யாருமில்லை
நீ பட்ட பாடுனிலும்
பாதியும் நான் கண்டதில்லை
என் அம்மா
ஏழ்மையை ஏற்காத
எம் பசி வயிற்றுக்காய்
தலை மேல் தொழில் ஏற்றவளே!
என் அம்மா
அரிசி மூட்டை தலையிலேத்தி
அந்த சுடு மணல் தீ மிதித்து
உலை கொதிக்க வச்சவளே!
என் அம்மா
அப்பச்சட்டி புகையோட
வெள்ளாமை வெட்டு காலத்துல
எங்கள் விடியலுக்காய் கண் முளிச்சவளே
என் அம்மா
சாணி மெழுகிய குடிசைக்குள்ள
எட்டு விளக்குகளை ஏற்றிவைக்க
உன் சந்தோசத்த ஈடு வச்சவளே!
என் அம்மா
சில்லறைக்காச கைல கொடுத்து
மிட்டாய் எதாச்சும் வாங்க சொல்லி
பள்ளிக்கூடத்தில் என்னை விட்டவளே
என் அம்மா
கிடைச்சதையெல்லாம் பித்து மனம்
எங்களுக்கு பங்கு வச்சு
உன் வயிறு காயவிட்டதென்ன
என் அம்மா
நாலு பெட்டையையும் நாலு பெடியனையும்
பெத்தெடுத்த தெய்வமென்று
தின்னையில முடங்கி போனாளே
என் அம்மா
நல்லொளி பார்வை தந்து
நடக்க புது பாதை தந்த
உன் விழிப்பார்வைக்கு வயதாகிவிட்டதோ
என் அம்மா
பயித்தியம் ஈன்ற
பிள்ளை நானோ
இன்று பட்;டம் படிக்கின்றேன்
என் அம்மா
விழிப்பார்வை நீ இழந்தாலும்
உன் வழியாக நான் தொடர்வேன்
ஈன்ற கடன் அடைக்க முடியாதவனாய்
என் அம்மா
த.நிறோஜன்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.