பிரேசில் கொரோனா தொற்றால் திணறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக 965 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இன்று பிரித்தானிய நேரம் காலை 7.38 வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 22,165 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சனிக்கிழமை அன்று 16,508 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 349,113 பேர் இங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று எண்ணிக்கையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்திற்கு பிரேசில் முன்னே சென்று உள்ளது.
கொரோனா பிரச்சனையை கையாள அதிபர் சயீர் பொல்சனாரூ சரியான நடவடிக்கை எடுக்காததே, இங்கு கொரோனா பூதாகரமாக அதிகரிக்க காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.