172
எங்களின் பாதங்கள் தரைமீதில்
படர்ந்து படர்ந்து செல்கின்றன
எங்களின் தலைகள் தொலைதூரக்
கிரகங்களாகிப் போகின்றன
எங்களின் வாழ்க்கை
வகுப்பறையுள் – என்றும்
வருவதில்லை
அது ஏனென்றும் கேள்வி
எழுவதில்லை – 2
கண்ணில் தெரிவதும்
கருத்தில் வருவதும்
தேவையில்லை
புத்தகத்தாள்களில்
இருப்பதை மீறி
உலகமில்லை – வேறு
உலகமில்லை.
எங்களில் புதையுண்ணும்
எங்களின் குரல்கள்
அரங்கேறும் இடங்களைத்
தேடிக்கொள்வோம்
எங்களின் குரல்களில்
எங்களுக்கான
பாடல்களை நாங்கள்
பாடிக்கொள்வோம் -2
சி.ஜெயசங்கர்
Spread the love