Home இலங்கைபடுகொலை செய்யப்பட்ட – ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..

படுகொலை செய்யப்பட்ட – ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..

by admin

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் 11.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வில் யாழ்.ஊடகவியலாளர்கள், கலந்து கொண்டு சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தினர். ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் கடந்த 2004ம் ஆண்டு மே 31ம் திகதி மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

இதேவேளை யாழ்.ஊடக அமையத்தை சூழவுள்ள பகுதிகளில் காவற்துறையினர் சீருடையிலும், சிவில் உடையிலும் குவிக்கப்பட்டு இருந்ததுடன், காவற்துறை அதிகாரியொருவரும் சிவில் உடையில் வந்த ஒருவரும் ஊடக அமையத்தின் வந்து ஊடகவியலாளர் ஒருவரிடம் நிகழ்வு தொடர்பில் கேட்டறிந்து விபரங்களை பதிவு செய்து சென்றுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More