பொதுத் தேர்தலை யூன் 20 திகதி நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட 6 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுக்கமாலேயே உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. யூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து, தாக்கல் செய்த 6 மனுக்களை விசாரணைக்கு எடுக்காமலேயே பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் – தீர்மானம் இன்று
Jun 2, 2020 at 06:34
பொதுத் தேர்தலை யூன் 20 ஆம் திகதி நாடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இன்று மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
யூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி ஆகியவற்றை வலுவிழக்க செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் கடந்த 10 நாட்கள் பரிசீலனைகள் இடம்பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது #பொதுத்தேர்தல் #மனுக்கள் #தீர்மானம்
Add Comment