Home இந்தியாகொரோனா பாதிப்பில் 2 லட்சத்தை நெருங்கும் இந்தியா

கொரோனா பாதிப்பில் 2 லட்சத்தை நெருங்கும் இந்தியா

by admin

உலகம் முழுவதும் கொரோனாவால் 63,71,661 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29,04,925 பேர் குணமடைந்துள்ளதுடன் 3,77,552 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், இத்தாலி, பிரித்தானியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், இந்தியாவும் பாதிப்பில் 2 லட்சத்தை நெருங்குகிறது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சு இன்று (2) காலை வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 8,171 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 370ஆக அதிகரித்துள்ளது. இதில், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 95,527ஆகவும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 97,581ஆகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்த நிலையில்,பலி எண்ணிக்கை 5,598 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஜூலை மற்றும் ஓகஸ்ட்டில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை நெருங்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், தற்போது 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில், 11ஆவது இடத்திலிருந்த இந்தியா தற்போது 7ஆவது இடத்துக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #கொரோனா  #இந்தியா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More