Home உலகம்உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகவுள்ளதாக பிரேசில் எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகவுள்ளதாக பிரேசில் எச்சரிக்கை

by admin


உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகவுள்ளதாக பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரா எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரேசிலில் கடந்த இருபத்துநான்கு மணி நேரத்தில் கொரோனா வைரசினால்ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதனைத் தொடந்து உலக சுகாதார அமைப்பை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று வெள்ளிக்கிழமை பேசிய அவர் ‘ உலக சுகாதார அமைப்பு ஒரு தலைபட்சமான அரசியல் நிலைப்பாட்டை நிறுத்தி கொள்ளாவிட்டால் பிரேசில் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக நேரிடும்’ என தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஹரிஸ் ‘தென் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவிக் கொண்டிருக்கிறது’ என தெரிவித்திருந்த நிலையில் பிரேசில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் கொரோனா வைரசினால் இதுவரை 6,46,006 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 35,047 பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 210 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பிரேசில் கடந்த இருவாரமாக கொரோனா வைரஸின் மையமாக மாறியுள்ளது.

கொரோனா தொற்று எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்திலும் (அமெரிக்காவில் 19, 65,708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்) , பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளநிலையில் பிரேசிலில் இருந்து மக்கள் வருவதை அமெரிக்கா தடை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கையில் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ அலட்சியமாக நடந்து வருவதாக உலக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ள அதேவேளை தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா தொற்று யூன் மாதம் மேலும் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. #உலகசுகாதாரஅமைப்பு  #பிரேசில் #எச்சரிக்கை #கொரோனா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More