Home இலங்கை யாழ். நாக விகாரைக்கு அருகில் புத்தர் சிலையின் கண்ணாடி கூடு சேதமாக்கப்பட்டுள்ளது

யாழ். நாக விகாரைக்கு அருகில் புத்தர் சிலையின் கண்ணாடி கூடு சேதமாக்கப்பட்டுள்ளது

by admin

யாழ். நாக விகாரை பிராதன வாயிலுக்கு அருகில் வீதியோரமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களே காண்ணாடி கூட்டை சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதேவேளை தாக்குதலாளிகளை இனம் காணும் முகமாக விகாரையை சூழவுள்ள பிரதேசத்தில் காணப்படும் CCTV காணொளிகளை  காவல்துறையினர் பரிசோதித்து வருகின்றனர்.
அதேவேளை ,  இன ஒற்றுமையை விரும்பாதவர்களினால் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவே இது தொடர்பில் மக்கள் குழப்பமடைய வேண்டாம் என  ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி  ஸ்ரீ விமல தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

  நான் நினைக்கின்றேன் யாரும்  வேண்டத் தகாதவர்களால் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்   நான் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்விடுக்கின்றேன். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழர், சிங்களவர் முஸ்லிம் என்ற வேறுபாடின்றி அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டு வருகின்றோம். அதனை குழப்புவதற்காக சிலரால் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதுதான் எனது கருத்து

இது தொடர்பில்  காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் இந்த விடயம் தொடர்பில் தென்பகுதியில் உள்ள பௌத்த மக்களோ அல்லது வேறு இன மக்களோ இது தொடர்பில் குழப்பமடைய வேண்டாம் எமது இன ஒற்றுமையை குழப்புவதற்காக இந்த விடயம் இடம்பெற்றிருக்கலாம்

இந்த விடயத்தினை  பெரிதாக்கி எமது இன ஒற்றுமையை குலைக்காது அனைவரும் ஒற்றுமையாக செயற்படுமாறு நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

இனவாததை தூண்டுபவர்களால்   இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனினும் இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சம்பந்தப்பட்டவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள் என தெரிவித்தார்.   #யாழ் #நாகவிகாரை   #புத்தர்சிலை  #இனவாதம்  #இனஒற்றுமை

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More