மட்டக்களப்பு என்னும்போது மிகவும் பிரபலமான விடயங்களாக காணப்படுபவைகளுள் சடங்கு விழாக்கள் முக்கியமான இடத்தை வகி;க்கிறன. சடங்கு விழாக்கள் எனும் போது அது ஒரு சமூக மையப்பட்ட பாரிய செயற்பாடாக காணப்படுகிறது. மட்டக்களப்பு பிரதேசத்தில் சடங்கு விழாக்கள் பெரும்பாலும் பெண்தெய்வச் சடங்குமுறை வழிபாடாகவே காணப்படுகிறது. பெண் தெய்வச் சடங்குமுறை வழிபாடுகள் எனும் போது அங்கு பிதான தெய்வங்களாக காளியம்மன், மாரியம்மன், பேச்சியம்மன், கண்ணகியம்மன் போன்ற பெண் தெய்வங்கள் காணப்படுகின்றனர். மிக நீண்ட கால வரலாறுடைய இச் சடங்குமுறை வழிபாடுகள் ஒரு சமூகமையப்பட்ட, இயற்கையுட்ன இணைந்த வழிபாட்டு முறைகளாக காணப்படுகின்றன. பொதுவாக, சடங்கு முறை வழிபாடுகள் வருடா வருடம் ஒவ்வொரு கிராமத்திலும் அக்கிராமத்தைச் சேர்ந்த சமூகத்தால் அதாவது சாதி ரீதியாக அல்லது குல ரீதியாக வகுக்கப்பட்டவர்களால் விழாக்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குலத்தவருக்கும் ஒவ்வொரு பெண் தெய்வத்தை வகுத்துக் கொண்டு அத் தெய்வத்திற்கு ஆண்டுக்கு ஆண்டு விழா எடுத்துக் கொண்டாடுவர்.
இவ்வாறு கொண்டாடப்படும் சடங்கு விழாக்கள் பெரும்பாலும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஒற்றை நாட்களில் நடைபெறுவது வழக்கம். மற்றும் இவ்வகையான சடங்கு முறைகள் ஆகமமுறை சாராத அதாவது பிராமணிய மயமாக்கப்படாத பத்தாசி எனப்படும் விதிகளுக்கமைய நடைபெறுகிறது. இந்த பத்தாசி முறை எனப்படுவது கோயில்களுக்கு கோயில்கள் வேறுபடும். ஆயினும் ஒவ்வொரு பத்தாசி முறையும் இயற்கையுடன் ஒத்திசையும் தன்மையையும், சமூகமேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கம் தன்மையையும் கொண்டுள்ளது என்பது உண்மை.
இவ்வகையான சடங்கு விழாக்கள் எமது பிரதேசத்தின் வெப்பகாலமாகிய வைகாசி மாதம் தொடக்கம் ஐப்பசி மாதம் வரையான காலப்பகுதியிலேயே நடைபெறுகின்றன. இக்காலப்பகுதியில் மழையை வேண்டி தெய்வத்தை நோக்கி விழா கொண்டாடப் படுகின்றது. இயற்கையுடன் கூடிய வழிபாடாகிய இச் சடங்கு வழிபாட்டு முறையானது பல்Nவுறு கோணங்களிலே ஆரயப்படக் கூடியதாக இருப்பினும் இங்கே நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கேற்ப எவ்வாறு இச் சடங்கு முறைகள் சமூகத்தோடும் குறிப்பாக பெண்களோடும் சம்பந்தப்படுகிறது என்பதனை இனிமேல் கவனித்தல் சாலத் தகும்.
பொதுவாக சடங்கு நடைபெறும் கோவில்களைக் கொண்ட கிராமங்களில் சடங்கு விழாக்கள் நடைபெறும் குறித்த தினங்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே அவ் விழாக்களுக்கான ஆயத்த வேலைகள் தொடங்கிவிடும். வருடா வருடம் நடைபெறுவதால் அதாவது பெரும்பாலும் வருடத்திற்கு ஒரு முறைதான ;ஆலயத்தின ;மூல அறை (கருவறை)க் கதவு திறக்கப்படுவதால் பலவிதமான ஆயத்த வேலைகளில் பெண்களும் ஆண்களும் கலந்துகொள்வர். இவ்வகையான ஆயத்தப் பணிகளில் பெண்களின் பங்கை இருவகையாக நோக்கலாம். அவையாவன ஊர் சார்ந்த ஆயத்தப் பணிகள், கோயில் சார்ந்த ஆயத்தப் பணிகள் என்பனவாகும்.
ஊர் சார்ந்த ஆயத்தப் பணிகளை எடுத்து நோக்கும்போது அவ்விடயம் சார்ந்து பெண்களே முன்னுரிமைப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக ஒரு சமூக மேம்பாட்டிற்கான பெரும்பாலான பணிகளை அவர்களேகையாள்கின்றனர். அதாவது சடங்கு நடைபெறும் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் பலர் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பவர்களாக இருப்பின் அவர்கள் சடங்கு விழாவை மையமாக வைத்தே அக்கிராமத்திற்கு வருகை தருவார்கள். அவ்வாறான வருகைகளை உறுதிப்படுத்துதல், அவர்களுக்கான தங்குமிட, உணவு வசதிகளை மேற்கொள்ளுவதற்கான ஆயத்தங்கள் என்பன பெரும்பாலும் அச் சமூகத்தைச் சேர்ந்த பெண்களாலேயே மேற்கொள்ளப்படுவது காணக்கூடியதாக இருக்கும்.
அதுமட்டுமல்லாது, ஊர்சார்ந்த சுத்தப்படுத்தல்கள், அதாவது வீடுகளை சுத்தப்படுத்துதல், வீதிகளை சுத்தப்படுத்துதல் எனப்பல வேலைகளில் முன்னின்று உழைப்பவர்களும் பெண்களே மேலும் சடங்கு விழாக்களுக்கு தேவையான பாவனைப் பொருட்கள் குறிப்பாக மஞ்சள், அரிசி, நெல் முதலியவற்றை முன்னராகவே தயார் செய்து இடித்து அவற்றிற்கான பயன்பாடுகளை கட்டுப்படுத்தி தம்வசம் வைத்திருப்பதில் ஆளுமை மிக்கவர்களாக காணப்படுபவர்களும் பெண்களே தயார்படுத்துதல் வேலைகளை செய்வதற்காக பலதடவைகள் குழுக்களாக சந்தித்து தீர்மானங்களை மேற்கொள்வதிலும் திறமைவாய்ந்தவர்களாக காணப்படுகின்றனர். இவ்வகையான செயற்பாடுகளால் தமக்குள் முன்னர் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளை தாமாகவே களைவதிலும் ஒன்றாகக் கூடி குழு வேலைகளில் ஈடுபடுவதிலும் ஒரு சமூகத்தினுடைய மேம்பாட்டை கூட்டுவதில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
சடங்கு விழா நடைபெறுவதற்கான பொதுக்கூட்டம் நiபெற்று முடிவதை அடுத்து, அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் குழுக்களாக கூடி கதைப்பர் அவ்வாறான கலந்துரையாடல்களின் போது தமக்குள் ஏற்படுகின்ற முரண்பாடுகளை களைகின்றனர். உதாரணமாக, தாமரைக்கேணி எனும் பிரசேத்தில் அமைந்துள்ள மகாமாரியம்மன் ஆலய சடங்கு விழா ஆரம்பிக்குமுன்னர் இரு குடும்பங்களுக்கிடையேயான ஒரு முரண்பாடு வயது முதிர்ந்த பெண்களால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வகையான சான்றுகள் இன்னும் பல காணப்படுகின்றன.
அடுத்து கோயில் சார்ந்த ஆயத்தப்பணிகளை நோக்குவோமானால் இரு பாலருக்கும் பெரும்பங்ககள் காணப்படினும், பொதுவாக பெண்களுக்கு ஒரு முக்கிய பங்கு காணப்படுகிறது. கோயில் பூசைமுறைகளுக்காக பாவிக்கப்படுகின்ற பாத்திரங்கள் மற்றம் கருவறைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சகலவற்றையும் தூய்மையாக்குதல் பெரும்பாலும் அச் சமூகத்தைச் சேர்ந்த பெண்களாகலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இவ் வகையான பணிகள் சடங்கு விழாக்களில் மிகவும் முக்கியமான கடமைகளாக கருதப்படுகின்றன.
அவ்வாறான சுத்தப்படுத்தும் வேலைகள் முக்கியமான கடைமைகாளாக காணப்படுகின்ற போதும், பெண்கள் எனும் போது வீட்டு வேலைகளுடன் சார்ந்த கழுவுதல், கூட்டுதுல் போன்ற வேலைகள் அவர்களசை; சார்ந்து விடுகின்றன. இவ்வகையான வேலைகளில் ஆண்களும் இணைந்து கொள்ளுதல் முக்கியமான விடயமாக காணப்படுகின்றது.
இவ்வாறான சடங்கு விழாவிற்கான ஆரம்பகட்டத் தயார்படுத்துதல் பணிகளில் பெண்களுக்கு மிகவும் முக்கியமான பொறுப்பான கடமைகள் இருப்பினும், சடங்கு விழாக்கள் சார்ந்து பெண்களுக்கான முடிவெடுக்கும் தகுதி, மற்றும் கோயில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நிர்வாக குழு அங்கத்துவம் என்பன இன்றுவரை பெண்களுக்கு கிடைக்கவில்லை. இவ்வகையான சந்தர்ப்பங்களில் பெண்கள் சார்ந்து சமூகத்தின் நிலைப்பாடு ஒரு மாற்றத்திற்குள்ளாக்கப்பட வேண்டிய ஒன்றாக காணப்படுகிறது.
அடுத்ததாக சடங்கு விழாக்களை எடுத்துக் கொண்டால் பெண்களது பங்கு மிகவும் முக்கியமன ஆழமான ஒன்றாகவே கருப்படக் கூடியது. உண்மையில் பெண் தெய்வச் சடங்குகளில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. குறிப்பாக சடங்கு விழாக்களை ஆறு அங்கங்களாக பிரித்துப்பார்க்கும் பழக்கம் வழமையாக சமூகங்களிடையே காணப்படுகிறது. இவ்வகை ஆறு அம்சத்திலும் பெண்கள் முக்கிய பங்குகளை வகிக்கின்றனர். அது எவ்வாறென்பதை இனி கவனித்தல் தகும்.
இங்குசடங்கு விழாவை ஆறு அம்சங்களாக பிரிக்காலாம் என கூறப்பட்டதற்கு அமைவாக அவ்ஆறு அம்சங்களையும் பின்வருமாறு நோக்கலாம்.
1. திருக்கதவு திறத்தலும் அம்மனை எழுந்தருளப்பண்னலுக்குமான சடங்கு.
2. சாதாரண சடங்குகள்.
3. சிறப்புச் சடங்குகள்.
4. பலிகருமச் சடங்குகள்
5. நீராவி எனப்படும் தீர்த்தச் சடங்குகள்.
6. தெளிவுச சடங்கு அல்லது நிறைவுச் சடங்கு.
இனி இவ்விதமான ஆறு அம்சத்தினூடும் சடங்கு விழாக்களில் பெண்களின ;பங்கு எந்தளவிற்கு உள்ளது என்பதை கவணித்தல் தகும்.
திருக்கதவு திறத்தலும் அம்மனை எழுந்தருளப் பண்னலுக்குமான சடங்கை எடுத்துக் கொண்டால், இவ் விடயத்தில் பெரும்பாலான கோயில்களில் முன்னுரிமைப் படுத்தப்படுபவர்கள் பெண்களே. இச் சடங்கில் முதலாவது அம்சமான விளக்கேற்றுதல் எனும் பகுதி பெண்களாலேயே செய்யப்படுகின்றது. மங்கள கரமான காரியங்களின் தொடக்கம் விளக்கேற்றுதல் இவ் விடயத்தை பெண்களே தொடரவேண்டுமென பெரும்பாலான பத்தாசி முறைகள் கூறுகின்றன. ஆயினும், இவ் விளக்கேற்றும் வைபவம் கருவறைக்கு வெளியே தான் நடைபெறும். அதன்பின் பூசகர் அவ்விளக்கை தூக்கிச் சென்று கருவறைக் கதவைத் திறந்து உள்ளே வைப்பார். இவ்வாறு நடைபெறும் இச் செயற்பாட்டிற்கு அக்கோயில்களின் பத்தாசியில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கம் பின்வருமாறு அமைகிறது. அதாவது உலகிற்கே ஒளி கொடுப்பவர் தாய், உயிர் கொடுப்பவள் தாய், எமது அஞ்ஞான இருளகற்றம் மெய்ஞான ஒளியை ஏற்றி வைப்பவள் தாய் எனும் கருத்திற்கமைய பெண்கள் குறிப்பாக அச் சமூகத்தின் மூத்த பெண்களால் இச் சுடர் ஏற்றப்படுகிறது என்கிறது பத்தாசி.
குறிப்பாக பெரு;பாலான மாரியம்மன் கோவில் பத்தாசிகளில் காணப்படும் மகாமாரியம்மன அகவலில் இவ்விடயம் பனி;வருமாறு குறிப்பிடப்படுகிறது.
‘ஆதியாய் அதன் முடிவாய் அரும் பெரும் ஜோதியாய்
ஐம்பத்தோர் அட்சரமாய் சோதியாய் வெட்ட வெளியாய்
செரூபமாய் நின்றவளே’ என்று கூறி,
‘சோதியெனும் திருவிளக்குச் சுடரதனை
உருவாக்கும் தாயவளால் ஏற்றப் பணிக்க’ என்று கூறப்படுகிறது.
தி,சி.மகேஸ்பரமுதலி – அதிபர், முன்னாள் தாமரைக்கேணி மகா மாரியம்மன் ஆலய பூசகர்)
சடங்கு விழாக்களை பொறுத்த வகையில் முதலாவது கட்டத்திலேயே இவ்வகையான முக்கியத்துவம் பெண்களுக்கு இருக்கின்றபோதும், ஏன் கருவறைக்குள் சென்று விளக்கை ஏற்றாது அவ் அறைக்கு வெளியே வைத்து விளக்கு ஏற்றப்படல் நடைபெறுகின்றது என்பது கேள்விக்குரிய விடயமாகிறது.
அடுத்ததாக சாதாரண சடங்குகளை எடுத்துக் கொண்டால், இச் சடங்கு வேளைகளில் திரை திறக்கப்பட்டு பூசை நடைபெறும் பொழுது இரண்டாவது மூன்றாவது மண்டபங்களில் நின்று கருவறைக்குள் இருக்கும் தெய்வத்திற்கு ஆராத்தி எடுத்தல் பெண்களாலேயே நிகழ்த்தப்படுகின்றது. இதில் முக்கியமான விடயம் என்னவெனில், இவ் வேளைகளில் குரவையிடப்படுவதாகும் இக்குரவை இடல் எனும் நிகழ்வும் பெண்களாலேயே நிகழ்தப்படுகிறது. இவை தவிர ஆண்களுக்கோ, பெண்களுக்கோ முக்கியமான வேலைகள் பொறுப்புக்கள் சாதாரண சடங்குகளில் காணப்படுவதில்லை. ஆயினும் பூசகர் மற்நும் உதவிப் பூசகர்களுக்கே முக்கியமான பொறுப்புக்கள் காணப்படுகின்றன.
அடத்ததாக மூன்றாவது கட்டமாகிய சிறப்புச் சடங்குகளை எடுத்து நோக்குவோமானால் அவற்றில் பின்வரும் பெயர்க்குறிப்பிடக் கூடிய சடங்குகளில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அவையாவன நெல்லுக்குத்துச்சடங்கு, கன்னிமார் சடங்கு, சர்க்கரை அமுதுச் சடங்கு, கல்யாணக்கால் வெட்டும் சடங்க அல்லது கன்னிக்கால் வெளட்டும் சடங்க, என்பவையாகும். இவ்வகைச் சடங்குகளில் பெண்களின் பங்கு எவ்வளவிற்கு உள்ளது என்பதை இனி நோக்கலாம்.
முதலில் நெல்லுக்குத்துச் சடங்கை எடுத்து நோக்குகையில், இச்சடங்கு பெரும்பாலும் சடங்கு நடைபெறும் கோயில்களில் மிகவும் முக்கியமான ஒரு சடங்காக கருதப்படுகிறது. இச்சடங்கிலே ஒரு ஓலைப்பெட்டியில் நெல்லை எடுத்து கருறைக்குள் வைத்திருப்பார்கள். பூஜையின் போது தெய்வம் ஆடுபவர் வெளியில் வந்து கூட்டத்தில் நிற்கும் ஒரு கல்யாணம் நடைபெற்றிருக்காத நெல்லுக்குத்தும் சடங்காயினும், கன்னியமார் சடங்காயினும், முன்னையகாலத்தில் கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்கள் கலந்து கnhள்வதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. ஆயினும் இன்றைய காலகட்டத்தில் இவ்விடயம் சற்று மாறி பருவமடையாத பெண்களாளேயே இச் சடங்குகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஒரு பெண்ணைக் கூட்டிவந்து கருவறைக்குள் அழைச்துச் சென்று அப்பெண்ணின் தலையில் அநநெல்லுப் பெட்டியை வைத்து அப்பெண்ணிற்குப் பூசைகள் செய்து ஊர்வலமாக கோயிலைச் சுற்றிவருவர். பின்னர் அதை நெல்லுக் குத்துவதற்காக தயார்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு கொண்டு சென்று நெல்லுக்குத்தும் வேலகளை ஆரம்பிப்பர் இவ்வாறு நடைபெறும் இச் சடங்கு முறைமூலம் பெண்களும் கருவறைவரை செல்லலாம் என்பது பத்தாசியில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இவ் விடயம் சார்ந்து மற்றைய வழிபாட்டு முறைகளுடன் ஒப்பிடும்பொழுது பெண்களின் பங்கானது பத்தாசி முறை சடங்கு வழிபாடுகளில் முக்கியத்துவப் படுத்தப்படுவது தென்படுகிறது.
இது இவ்வாறிருக்க இதற்கு அடுத்த கட்டமான நெல்லுக்குத்துதல் வேலைகளும் பெண்களாகலேயே செய்யப்படுகின்றன. பொதுவாக பெண்களது வேலைகளாக கருதப்படும் வீட்டு வேலைகளான சமைத்தல், கழுவுதல், இடித்தல் போன்ற வேலையாக நெல்லுக்குத்தலும் காணப்படுவதால் பெண்களே நெல்லுக்குத்த வேண்டும் என்ற விடயம் காணப்படுகிறது. ஆகவே இவ்விடயம் சாந்தும் ஒரு கலந்துரையாடலை முன்வைப்பது பொருந்தும்.
அடுத்து கன்னியார் சடங்கு விழாவை எடுத்துக் கொண்டால் பேருக்கேற்ப முழுக்க முழுக்க பெண்களுக்காக முக்கியத்துவம் கொடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தி கொண்டாடப்படுமு; ஒரு சடங்காக காணப்படுகிறது. இச் சடங்கின் பின்னணியாதென பத்தாசி கூறுகையில், கருவறையில் வீற்றிருக்கும் மூலத் தெய்வமாகிய பெண் தெய்வத்தின ;தோழிகளான ஏழு பேர் கன்னியருக்கும் வழிபாடு செய்து அவர்கள் மூலம் மூலத் தெய்வத்தை அணுகுதலுக்கான வழி எனக் கண்டு கொள்ளப்படுகிறது. இச் சடங்கின் போது ஆண்களும், பெண்களும் தமது நேர்த்திக் கடன்களை கழித்துக் கொள்ளவும் முற்படுவர். எவ்வாறெனில் கன்னிமாராக தேர்ந்தெடுக்கப்படும் பெண்பிள்ளைகளின் கால்களைக் கழுவி அவர்களுக்கு வழிபாடு செய்து அவர்களுடைய நேர்கடன்களை நிவர்த்தி செய்து கொள்வர்.
குறிப்பாக இந்தக் கன்னிமார் சடங்கைத் தொடர்ந்து நிகழ்த்தப்படும் சர்க்கரை அமுதுச் சடங்கு வெகுசிறப்பாக கன்னிமாரை திருப்திப்படுத்தும் சடங்காகவே நடைபெறுகிறது. அதாவது சர்க்கரை அமுது எனும்Nபுhது, கன்னிமார் அனைவரும் கருவறைக்குள் இருந்து பூசைகள் நிறைவு பெறற்வுடன் கோயிலைச் சுற்றி குடை, கொடி, சாமரம், ஆலவட்டம் முதலிய மரியாதைகளுடன் அழைத்துவரப்பட்டு சர்க்கரை அமுது வழங்கத் தயர் படுத்தப்பட்டிருக்கும் மண்டப சாசலில் வைத்து மேலதிக மரியாதைகள் செய்யப்பட்டு உள்ளழைத்து வரப்படுவர். இங்கு மேலதிக மரியாதைகள் எனும்போது, கன்னிமாராக பாவணைக பண்ணப்படும் பெண் பிள்ளைகளது கால்களைக் கழுவி, பூப்போட்டு வணங்கி அவர்களை உள்ளே அழைத்துச் செல்வர். இவ்வழிபாட்டில் இருபாலானினதும் பங்குபற்றல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கன்னிமாருக்கு அமுது படைத:து கனம் பண்ணி வணங்கி தமது நேர்கடன்களை மக்கள் தீர்த்தக் கொள்வர்.
இந்த கன்னிமார் சடங்கின்போது பெண்கள், குறிப்பாக கன்னிமாராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பெண்கள் மூலவறைக்குச் சென்று வருதல் மிக முக்கியமான விடயமாக காணப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் கன்னினமாராக சிறு பெண்பிள்கைளையே தேர்ந்தெடுக்கின்றனர். ஏனெனில் பருவடைந்த பெண்கள் தீட்டுக்கு உரியவர்கள் எனும் பிராமணிய வாதம் இக்காலகட்டத்தில் சற்று எம்மவரின் சடங்குமுறை வழிபாட்டில் ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டிருப்பதனை அறியலாம். பண்டைய காலச் சடங்குமுறை வழிபாடுகளில் கன்னியார் பூசை கலியாணமாகாத கன்னிப் பெண்களுக்கே நடைபெற்றிருப்பது அறியப்பட்ட விடயமாக காணப்படுகிறது. எனவே இக்காலகட்டத்தில் காணப்படும் இவ்வகையான ஒதுக்கீடுகள் களையப்படக்கூடிய களையப்படவேண்டிய ஒன்றாக காணப்படுகிறது.
மேலும் இக் கன்னிமார் சடங்கானது பெரும்பாலான சடங்குக் கோயில்களில் முக்கியமான சடங்காக காணப்படுகிறது. ஏனெனில் பெண்தெய்வச் சடங்கு வழிபாட்டிலே பெண்களை முன்னிலைப்படுத்தி நடைபெறுகின்ற சடங்காக இச்சடங்கு அமைகிறதோடல்லாமல் தாய்வழிபாட்டின் பெருமையை, முக்கியத்துவத்தைக் காட்டுவததாகவும் அமைகிறது.
அடுத்ததாக கல்யாணக்கால் வெட்டும் சடங்கு அல்லது கன்னிக்கால் வெட்டும் சடங்கு, இச் சடங்கு கோயிலுக்கு கோயில் மூலத்தெய்வத்தைப் பொறுத்து பத்தாசி மறையில் கூறப்பட்டுள்ளவாறு சிறு சிறு மாறுபாடுகளைக் கொண்டு காணப்படுகிறது. குறிப்பாக சில பத்தாசிகளில் கல்யாணக்கால் வெட்டும் சடங்கு எனவும் சில பத்தாசிகளில் கன்னிக்கால் வெட்டும் சடங்கு எனவும் குறிப்பிடப்பட்டு காணப்படுவது கவனிக்கப்பட்டுள்ளது. கல்யணக்கர்ல் வெட்டும் சடங்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ள பத்தாசிகளின் கருத்துக்களை நோக்குNவுhமானல், மூலத்தானத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் திருக்கல்யாணத்திற்கு நடப்படுமு;காலாகவும், கன்னிக்கால் வெட்டும் சடங்கு என குறிப்பிடப்பட்டுள்ள பத்தாசிகளில் அம்பாளின் பருவமடைந்த விழாவைக் கொண்டாடுதலுக்கு நடப்படும் காலாகவும் கொள்ளப்பட்டிருக்கிறது. இவ் இரண்டுவகையாக வேறுபட்டிருக்கும் சடங்குகளின் போதே கன்னிமார் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான சேடிப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
இவ்வகையான சிறப்புச் சடங்கு விழாக்களின்போது பெண்களின் பங்கு மற்றும் முக்கியத்துவம் என்பன எமது கிராமிய பெண்தெய்வச் சடங்கு முறைகளில் மேலோங்கிக் காணப்படுவதால் கவனிக்கத்தக்க அம்சமாகும்.
அடுத்ததாக இவ்வகைச் சடங்கு விழாக்களின் நான்காவது கட்டமாகிய பலிகருமச் சடங்குகளை எடுத்துகு; கொள்வொம். இவ்வகையான பலிகருமச் சடங்குகளில் தீப்பாய்தலும் ஒன்று பெரும்பாலும் காளி கோயில்களிலேயே தீமிதிக்கும் சடங்குகள் நடைபெறுவுது வழக்கம். சாதாணமாக நோக்;கும்போது, இவ்வகை தீமிதிக்கும் சடங்குகளில் பெண்களே அதிகளிவல் கலந்துகளொவ்தை கவனிக்கக் கூடியதாக இருக்கும் சமூக ரீதியில் எமது வாழ்க்கையை பக்திமார்கக்த்தில் தீர்மானிப்பதில் பெண்கள் அதிக கடப்பாடு உடையவர்களாக காணப்படுவதை இவ் விடயத்தில் நர் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. பெரும்பாலும் ஒரு குடும்பத்தின் ஒரு சமூகத்தின் ஒழுங்கை அமைப்பை பேணுவதற்காக, சந்தோசமாக வாழ்தவ்றகாக பெண்கள் தம்மை அர்ப்பணித்து சேவை செய்வதையும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
மேலும் இவ்வகை பலிகருமச் சடங்ககளில் தெய்வங்களுக்கு பலிகருமம் திட்டப்படுத்தலுக்காக தயார் பண்ணப்படும் பொருட்கள் சார்ந்தும் பெண்களுக்கு ஒரு கனிசமான பங்கு காணப்படுகிறது. அதாவது,பலிகருமப் பொருட்களில் மிக முக்கியமான பொருளாக காணப்படுவது அரிசிமா ரொட்டி ஆகும். இந்த ரொட்டியை ஆண்கள் தான் தயாரிப்பார்கள். ஆயினும் அவற்றிற்கான அளவுப் பரிமானங்கள் அந்த சமூகத்தச் சார்ந்த பெண்களாலேயே தீர்மானிக்ககப்படுகிறது.
இவ்வiகாய பல்வேறு வேலைகளிலும் பெண்களுக்கும் கனிசமான பங்கு காணப்படுவதால் சடங்கு வழாக்களில் பெண்களும் இஸ்டமுடன் பங்கெடுத்துக் கொள்ளவது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக நீராவி எனப்படும் தீர்த்தச் சடங்கையும், தெளிவுச் சடங்கையும் ஒன்றாக எடுத்து நோக்கலாம். மேற்படி இவ்வஇரு சடங்கிலும் பூசகரதும், உதவிப் பூசகர்களினதும் பங்குகளே பெருவாரியாக காணப்படுகின்றன. இருந்தபோதும் தெளிவுச் சடங்கிற்கான பிரசாதங்கள் தயாரிப்பதில் பெண்களது பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. தெளிவுச் சடங்கிலே தான் மூல அறையின் கதவு மீண்டும் பூட்டப்படுவதால் அன்றைய தினம் சகலரும் வேறுபாடின்றி மூலத்தானத்திற்குள் சென்று பூப்போட்டு வணங்குதல் இன்னமுமு; சில ஆலயங்களில் காணப்படுகிறது.
பொதுவாக இவ்வாறு நடைபெறுகின்ற பெண் தெய்வச் சடங்கு விழாக்களில் பெண்களின் பங்கு கனிசமான அளவு காணப்படினும், பெண்கள் சார்ந்து இன்னும் சில விடயங்கள் மாற்றத்திற்குள்ளாக்கப்பட வேண்டியனவாகவே காணப்படுகின்றன. குறிப்பாக சடங்கின் முக்கிய நபரான பூசகர் வேலைகளிலே பெண்களின் பங்கு மிகக் குறைவானதாகவே அல்லது இல்லாத ஒன்றாகவே காணப்படுகிறது. இவ்விடயம் சார்ந்து, சடங்கின் முக்கியமான பகுதியான பூசகர் வேலையிலும் பூசை சார்ந்த பணிகளிலும் பெண்களின்பங்கு அதிகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மேலும் இன்றைய காலகட்டத்ங்களில் பெண்களின் மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப்படவதில்லை என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். இவ்விடயம் மிகவும்ப லமாக எம்மிடத்தே வேறூன்றி காணப்படுகிறது. இயற்கையால் நிர்ணயிக்கப்பட்ட செயற்பாடே மாதவிடாய ;எனப்படுவது இதை ஏன் தீட்டு என்றும் துடக்கு என்றும் பெண்களை ஒடுக்குவதற்கான காரணமாக பாவிக்க வேண்டும் என்பது கேள்விக்குரிய விடயமாக, கலந்துரையாடப்பட வேண்டிய விடயமாக அமைகிறது.
எனவே, பெண் தெய்வச் சடங்குமுறை வழிபாட்டிலே ஒரு சமூக மையப்பட்ட அரங்கை நாம் காணக்கூடியதாக இருப்பதால், பெண்கள் சார்ந்த இவ்விதமான ஒஒடுக்குதல்களை கலந்துரையாடல்களை அச் சமூகத்தில் ஏற்படுத்தி இவ்விரதமான ஒடுக்குதல்களையும் நீக்கி ஒரு சிறந்த சமூகத்தை, சமத்துவமான,தன்னipறவானசமூகத்தை உருவாக்க இவ்வகை சடங்கு விழாக்கள் சிறந்த ஒரு ஊடகமாக அமையலாம்.
அடிக்குறிப்புக்கள்:
01. பங்குபற்றல் செயற்பாட்டு அனுபவம், அவதானம், உரையாடல்கள், நேர்காhணல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை.
02. பங்குபற்றல்:
1. தாமரைக்கேணி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், மட்டக்களப்பு.
2. ஆரையம்பதி ஸ்ரீ வடபத்திரகாளி ஆலயம், மட்டக்களப்பு.
3. ஆரையம்பத ஸ்ரீ முத்துமரியம்மன் ஆலயம், மட்டக்களப்பு.
03. நேர்காணல்கள், கலந்துரையாடல்கள்.
1. காலஞ்சென்ற அமரர். சி. மகேஸ்வரமுதலி – அதிபர் மற்றும் முன்னாள் பூசகர், தாமரைக்கேணி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம்)
2. திரு. குமாரதாசன் – பூசகர், தாமரைக்கேணி மகா மாரியம்மன் ஆலயம்.
3. திரு. வை. இ. எஸ் காந்தன் குருக்கள்.
4. சமூகத்திலுள்ள பெண்கள், ஆண்கள்.
ஜோ. கருனேந்திரா.
மூன்றாவது கண்; உள்ளுர் அறிவு
திறன்செயற்;பாட்டுக் குழு