Home உலகம் ஆபிரிக்க நாடுகளில் தங்கியிருக்கும் மேற்குலக நாடுகள், மறைக்கப்படும் உண்மை.- சுரேஸ்குமார் சஞ்சுதா…

ஆபிரிக்க நாடுகளில் தங்கியிருக்கும் மேற்குலக நாடுகள், மறைக்கப்படும் உண்மை.- சுரேஸ்குமார் சஞ்சுதா…

by admin

எண்ணெய் மணம் வீசும் அங்கோலா, நைஜீரியா, துள்ளிக் குதிக்கும் மீன் வளம் நிரம்பிய மேற்கு ஆபிரிக்கக் கடல், வேலையை வேகமாக முடிக்காத காரணத்தால் வெட்டப்பட்ட கறுப்பின மக்களின் கைகளி;ல் இறப்பர்பால் வழியும் காங்கோ. கறுப்பு தோலை உரித்து எடுக்கும் சூடானின் கட்டித்தங்கங்கள், உலகின் நாவுக்கு சாக்லேட்டின் மூலப்பொருளை வாரிவழங்கும் ஆபிரிக்காவின் ஐவரிகோஸ்ட், உலகுக்கே கோப்பியை ஏற்றுமதி செய்து விட்டு எலும்பும் தோலுமாய் சாவை இறக்குமதி செய்யும் எத்தியோப்பியா ஆகிய 54 நாடுகளைக் கொண்டமைந்தது ஆபிரிக்கக் கண்டம். ஆபிரிக்கக் கண்டம் பற்றிய எமது அறிவு மிகக் குறுகியது. பிரிட்டிஸ் காலனியக்காரர்கள் கற்பிக்கும் வரை இந்து மகாசமுத்திரத்திற்கு அப்பால் இருந்த பாரிய நிலப்பரப்பு எமது கண்ணிற்கு புலப்படவில்லை. ஆபிரிக்கக் கண்டம் பல அதிரடிச் செய்திகளுக்கு புகழ் பெற்றது. அங்கே ஏதோ ஒரு நாட்டில் திடீர் திடீரென ஆட்சி கவிழும் திடீர் திடீரென கிளர்ச்சியாளர்கள் நவீன ஆயதங்களுடன் தோன்றுவார்கள்.

ஆபிரிக்கா என்றவுடன் அபிவிருத்தியின்மை, தொற்று நோய், பட்டினிச்சாவு, ஏழ்மை இவற்றிற்கு ஒத்தக்கருத்துள்ள சொல்லாக பலரால் புரிந்து கொள்ளப்படுகின்றது. உண்மையில் அவ்வாறான கருத்துக்கள் வேண்டுமென்றே மேற்;குலக ஊடகங்களாக பரப்பப்படுகின்றன. ‘இருண்ட கண்டம்’ என்று நிறவாதம் சூட்டிய பெயர். பிரிட்டிஸ் ஏகாபத்தியம் ஆபிரிக்கா பற்றிய தவறான கருத்துக்களை பொதுக்கருத்துக்களாக போதித்தது. அதனாலே பல ஐரோப்பியரின் பார்வையிலேயே நாமும் ஆபிரிக்காவை பார்க்க கற்றுக்கொண்டுள்ளோம்.

அந்தவகையில் எனக்கு அண்மையில் கலையரசன் என்பவரால் எழுதப்பட்ட ‘ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா’ எனும் நூலினை வாசிக்கும் வாய்ப்பு ஏற்பட்டபோது ஆபிரிக்கா பற்றிய பல விடயங்களை அறிந்து கொள்ளமுடிந்தது. அதனையே இங்கு தொகுப்பாக்குகிறேன். உண்மையில் ஆபிரிக்க அரசியலில் என்ன நடக்கிறது? ஆபிரிக்க ஏழை நாடாக இருப்பதற்கு காரணம் என்ன? அவ்வாறு ஏழை நாடாக ஆபிரிக்க இருப்பதற்கு ஆபிரிக்க ஆட்சியாளர்களின் பங்கு என்ன? முக்கியமாக ஆபிரிக்க இருண்ட கண்டம் எனக் கூறக்காரணம் என்ன? அவ்வாறு ஆபிரிக்காவை வர்ணித்தவர்கள் யார் என்;பதை இக்கட்டுரையின் மூலம் அறியலாம் என நம்புகின்றேன்.

ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான சர்வதேச வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்திய அரேபியர்களுடன் போர் மூண்ட பின்னர் மாற்றுக் கடல்வழிப்பாதை ஒன்றைத் தேடிய ஐரோப்பிய (போர்த்துக்கீச) மாலுமிகள் ஆபிரிக்காவை தற்செயலாகக் கண்டுபிடித்தனர். மேற்குக் ஆபிரிக்கக் கரைநாடுகளான செனகல், கானா போன்ற நாடுகளில் இருந்து அடிமைகளாக்கப்பட்ட மக்களை புதிதாகக் கண்டுபிடித்த அமெரிக்க கண்டத்திற்கு ஏற்றுமதி செய்யும் வாணிபம் ஆரம்பமாகியது. ஆபிரிக்க அடிமைகளின் உழைப்பைச் சுரண்டி அமெரிக்கா பணக்கார நாடானது. அடிமை வியாபாரத்தினால் மேற்கு ஐரோப்பியர்கள் செல்வந்தர்களானார்கள் என்று சுருக்கமாகக் கூறலாம். இருப்பினும் தாம் சேர்த்த செல்வத்தில் ஒரு பகுதியை நட்ட ஈடாக ஆப்பிரிக்க வளர்முக நாடுகளுக்கு கொடுக்க இதுவரை யாரும் முன்வரவில்லை. மாறாக அபிவிருத்திக்காக என்று சொல்லி, வட்டிக்கு கடன் கொடுத்து மேலும் மேலும் செல்வம் சேர்த்து வருகின்றனர். இதனால் மேற்குலகம் செய்வதையெல்லாம் மறுகாலனியாதிக்க சதிகளாக இன்று ஆபிரிக்க மக்கள் சந்தேகிக்கின்றனர்.

ஹிட்லர் காலத்தில் nஐர்மனியில் நடந்த யூத இனப்படுகொலைக்கு நட்ட ஈடாக, ஆண்டுதோறும் ஒரு தொகைப் பணத்தை nஐர்;மனி இஸ்ரேலுக்கு கொடுத்து வருகின்றது. இஸ்ரேல் பணக்கார நாடாக இருப்பதற்கு இந்த நட்ட ஈடு வழங்க வேண்டுமென்று ஆபிரிக்க நாடுகள் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இத்தாலி மட்டுமே லிபியாவிற்கு காலணிய கால நட்ட ஈடு வழங்க முன்;;வந்துள்;ளது. லிபிய தலைவர் கடாபியின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்பட்டாலும், ஆப்பிரிக்க அகதிகளை வரவிடாமல் தடுப்பதில் இத்தாலிக்கு உள்ள கரிசனை இங்கே கவனிக்கத்தக்கது.

மேற்குலக எதிரிகளின் பட்டியலில் முதன்மையான இடம் வகிக்கும் சூடான் சீனாவுடன் சிறந்த வர்த்தக உறவுகளைப் பேணி வருகின்றது. மேற்குலகம் பொருளாதார திட்டங்களுக்கு மனித உரிமைப் பிரச்சினையை நிபந்தனைகளாக விதிப்பதைப் போல சீனா நடந்துகொள்வதில்லை. சீனா உள்நாட்டு பிரச்சினையில் தலையிடாத போக்கை கடைப்பிடிக்கின்றமை சூடானிய அரசுக்கு அனுகூலமானது. சூடானில் உள்ள எண்ணெய் கிணறுகள் யாவும் சீன நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன.

அமெரிக்கா என்னதான் மனித உரிமைகளுக்காகப் பாடுபடுவதாக வெளி உலகிற்கு காட்டி கொண்டாலும், சூடான் எண்ணெய் வளத்தின் மீது கண் வைத்திருப்பதை மறைக்க முடியாது. நைல் நதியின் நீர்வளத்தை வர்த்தக நோக்கோடு பயன்படுத்தும் திட்டமும் உள்ளது. மனித உரிமை மீறல்களைக் காரணமாகக் காட்டி சீனா சூடானுடனான இராஜதந்திர உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா ஐ.நா சபை மட்டத்தில் அழுத்தம் பிரயோகித்து வருகின்றது. ஆனால் இப்போதெல்லாம் சீனாவோ மனித உரிமை மாய்மாலங்களுக்கு ஏமாறும் வகையாகத் தெரியவில்லை.

இன்றைய லைபீரியா ஆட்சியாளர்கள் அனைவரும் முன்னாள் அமெரிக்க அடிமைகளின் வழித்தோன்றல்கள். இன்றுவரை தமது தந்தையர் நாடான அமெரிக்காவுடன் சிறந்த நட்புறவுகளைப் பேணி வருகின்றனர். அமெரிக்க வர்த்தக ஸ்தாபனங்கள் லைபீரியாவின் கனிமப்பொருள் வளங்களின் மீது ஏகபோக உரிமை பெற்றுள்ளன. உதாரணமாக இறப்பர் ஏற்றுமதிக்கு பயர்ஸ்டோன், குட்றிச் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் 99 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளன. இதை விட பல எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இளகிய சட்டங்களைக் கொண்ட லைபீரியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த முக்கியத்துவம் காரணமாக லைபீரிய அரசியல் ஆட்டம் காணும் போது எல்லாம் அமெரிக்கா தலையிட்டு ஸ்திரப்படுத்தி வந்தது.

இன்று அங்கோலா அமெரிக்காவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. இதன் காரணமாக இரு நாடுகளிற்கும் இடையில் சிறந்த நட்புறவு நிலவுகின்றது. ஒரு காலத்தில் இருந்த சோசலிசப் பொருளாதாரம் கைவிடப்பட்டு, முதலாளித்துவமயமாகி விட்டது.
சூடானில் குழந்தைப்போராளிகளைச் சேர்த்து வைத்திருக்கும் குகஃஅ இயக்கத்திற்கு மறைமுகமாக, அமெரிக்கா ஆயுதம் வழங்குகின்றமை குறித்துநோக்கத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்னர் எண்ணெய்யை கண்டுபிடித்த அமெரிக்க பக்தரான சாட் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அரசுக்கெதிரான ஆயுதக் கிளர்ச்சி திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்கு போட்டுப் பார்த்ததுடன் அக்கிளர்ச்சி வெற்றி பெற்றால் எண்ணெய் கிணறுகளை அமெரிக்க கம்பனிகளுக்கு தாரை வார்த்திருப்பார் என்றும் குறிப்பிடப்பட்ட தகவல்(கலையரசன், ‘ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா’) கூர்ந்து நோக்குதற்குரியது.
காலனியாதிக்கத்தலிருந்து விடுதலை பெற்ற நாடுகளில் ஐனநாயகத்தை கொன்று சர்வாதிகாரத்தை அரியணை ஏற்றிய மேற்குலக சக்திகள், இயற்கை வளம் நிறைந்த காங்கோவில் இருந்து ஆரம்பமாகியது. 1960 இல் பெல்ஐpயத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற காங்கோவின் மக்களது மனங்கவர்ந்த தேசியவாதத் தலைவர் லுமும்பாவை நஞ்சு கொடுத்து கொலை செய்யுமாறு அமெரிக்காவில் இருந்து உத்தரவு வந்தது. அந்த பாதகச்செயலை செய்யச் சொன்னது அன்றைய அமெரிக்க ஐனாதிபதி ஐசன் ஹோவர் என்ற செய்தியை, குறித்த நூல் விபரிக்கிறது.

ஆபிரிக்கா கண்டத்தின் வரைபடத்தில் தேச எல்லைகள் பென்சிலால் கோடு கீறியது போல இருக்கும். உண்மையில் அப்படிதான் ஐரோப்பிய வல்லரசுகள் ஆபிரிக்காவை தமக்குள் பங்கு பிரித்துக் கொண்டனர். 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா கண்டத்தில் தேசிய அரசுகள் உருவாக ஆரம்பித்தன. அப்போதெல்லாம் காலனிகள் வைத்துக் கொள்வது ஒரு கௌரவம். இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துக்கல், ஜேர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஆபிரிக்க வரைபடத்தை மேசை மீது வைத்து தமக்குத் தேவையான துண்டுகளை பென்சிலால் கீறிப் பெற்றுக்கொண்டனர். இந்த எல்லை கோடுகள் வகுக்கும் போது ஆபிரிக்க மக்களின் விருப்பங்கள் புறக்கணிக்கப்பட்டன. அவர்களது தலைவிதியை வடக்கே இருந்த ஐரோப்பியக் கடவுளர்கள் தீர்மானித்தனர். ஒரே மொழி பேசும் இனங்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் பிரிக்கப்பட்டு வௌ;வேறு நாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

கண்டத்தின் மத்தியப்பகுதியின் இருந்த காங்கோ பிரதேசத்திற்குப் பல பேர் போட்டியிட்டனர். இறுதியில் சிறிய துண்டான காங்கோ- பிராசவீல் பிரான்சிற்கும் , பெரிய துண்டான காங்கோ- கின்ஸாசா பெல்ஜியத்;திற்கும் கிடைத்தது. பெல்ஜிய மன்னன் லெயோபோல்ட், கிட்டத்தட்ட ஐரோப்பிய கண்டத்திற்கு நிகரான காங்கோவை தனது தனிப்பட்ட சொத்தாக்கிக் கொண்டார். அத்துடன் ஒரு சர்வதேச நிறுவனத்தை தொடங்கி நிர்வகித்து வந்தார். இருப்பினும் ஒப்பந்தத்தின் படி பிற ஐரோப்பிய நாட்டு நிறுவனங்களையும் காங்கோவில் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டி இருந்தது.

பெல்ஜியம் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேரந்த நிறுவனங்கள் யாவும், காங்கோவில் கனிமவளங்களை அகழும் சுரங்கங்கள் தோண்டியது மட்டுமே ஒரே ஒரு ‘அபிவிருத்தி’. தங்கம், வெள்ளி, வைரம், நிக்கல், குரோமியம் என்று நிலத்தில் இருந்து தோண்டியெடுத்த விலைமதிப்பற்ற பொருட்களை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன.

காங்கோவின் இயற்கை வளம் நிறைந்த கதங்கா மாகாணம், பெல்ஜிய தூண்டுதலால் தனிநாடாக பிரிவதற்கு அறிவித்தது. வெள்ளையின பெல்ஜிய படைகள் அதற்கு பாதுகாப்பு கொடுத்தனர். சுதந்திரமடைந்து ஐந்து நாட்களில் இந்த கலகம் ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. காங்கோ பிரதமர் லுமும்பா அமெரிக்க தூதுவரை சந்தித்து அமெரிக்க படைகளை அனுப்பி உதவுமாறு கோரினார். தூதுவர் மறுக்கவே லுமும்பார்யர்களிடம் உதவி கேட்க வேண்டிய நிர்பபந்தம் ஏற்பட்டது. உடனே இது தான் சாக்கென்று ‘லுமும்பா ஒரு கம்யூனிஸ்ட்’ என்று அமெரிக்கா முத்திரை குத்தி விட்டது.

இறுதியில் ஐ.நா மன்றத்தில் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஐ.நா. சமாதானப்படை வருவதற்கு ஒத்துக் கொண்டது. ஆனால் அதுவே லுமும்பாவின் மரணத்திற்கு இட்டுச் சென்ற தவறான முடிவாக இருந்தது. ஐ.நா சமாதானப் படை இன்று மட்டுமல்ல, அன்றும் ஏகாதிபத்திய நலனுக்காகதான் செயற்பட்டது. சி.ஐ.ஏ தூண்டுதலின் பேரில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவ தளபதி மொபுட்டுவின் படையினர் ஸ்டானிலிவீல்(கிசன்கானி) என்ற நகரத்திற்கு போகும் வழியில் லுமும்பாவை கைது செய்தனர். நடந்த சம்பவத்தை கானாவைச் சேர்ந்த ஐ.நா சமாதானப்படையினர் கண்டபோதும், அவர்களை தலையிடவேண்டாம் என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது. மொபுட்டு லுமும்பாவை கைது செய்து கதங்கா பிரிவினைவாதிகளின் கைகளில் ஒப்படைத்தார். அங்கே வைத்து பெல்ஜிய அதிகாரிகளின் முன்னால் சித்திரவதை செய்யப்பட்டு, இறுதியில் நஞ்சு கொடுத்து கொலை செய்யப்பட்ட லுமும்பாவின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு திராவகத்திற்குள் கரைக்கப்பட்டது. அமெரிக்காவும் பெல்ஐpயமும் சேர்ந்து தமது எதிரியை இப்படித்தான் தீர்த்துக் கட்டினார்கள். ஏகாதிபத்தியத்தின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய லுமும்பாவின் மரணம் உலகெங்கும் அமெரிக்க எதிர்ப்பு அலையைத் தோற்றுவித்தது. ஆசிய – ஆபிரிக்க நாடுகள் ஐ.நா மன்றத்தில் தமது கண்டனங்களைக் கொட்டினர். சோவியத் யூனியன் மொஸ்கோவில் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு லுமும்பாவின் பெயரிட்டது.

அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவரால், பெல்ஜிய மன்னன் போதுவாவினால் வெறுக்கப்பட்ட லுமும்பாவை கொலை செய்வதற்கான காரணம் என்ன? காங்கோவில் கொலைக்கான சதித்திட்டங்களை நிறைவேற்றிய சி.ஐ.ஏ அதிகாரி டெவ்லின் ‘ ஊழுNபுழு ரூ குஐபுர்வுஐNபு வுர்நு ஊழுடுனு றுயுசு ஐN யு ர்ழுவு ணுழுNநு’ என்ற நூலில் வாக்குமூலம் கொடுக்கிறார். அதில் அவர் லுமும்பா கம்யூனிஸ்ட் இல்லை என்பது ஏற்கனவே தெரியும் என்றும், கம்யூனிசத்;;தை எதிர்த்து போரிடுவது என்பது ஒரு சாட்டு என ஒப்புக் கொள்கிறார். அப்படியானால்? அன்றைக்கு சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டிற்குள் காங்கோ வந்திருக்குமானால், கோபால்ட் சுரகங்களும் அவர்களது கைகளுக்கு போயிருக்கும்;. (ஏவுகணை பிற ஆயுதங்கள் தயாரிப்பதற்கு கோபால்ட் அத்தியாவசியமான பொருள்) அது உலகில் சோவியத் யூனியனிலும், காங்கோவில் மட்டுமே இருந்தது. ஆகவே அமெரிக்கா காங்கோவை கைப்பற்றியிராவிட்டால் சர்வதேச ஆயுதப்போட்டியில் பின்தள்ளப்பட்டிருக்கும். இதற்கு முன்னரே ஆபிரிக்காவின் வளங்களைக் உலக மேலாதிக்க நோக்கத்திற்காக ஏகாதிபத்தியம் பயன்படுத்த தொடங்கி விட்டது. காங்கோவில் இருந்து எடுக்கப்பட்ட யுரெனியத்தைக் கொண்டு செய்த அணுகுண்டுதான் ஹிரோஷிமா, நாகசாகி மீது போடப்பட்டது. காங்கோவின் வைரங்களைக் கொண்டு ஆங்கிலேய – அமெரிக்க கூட்டணி இரண்டாம் உலகப்போரில் வெற்றியீட்டியது. இன்றும் கூட கணினி, மொபைல் தொலைபேசி ‘சிப்’ பிற்கு பயன்படும் மூலப்பொருளான கொல்த்தான் காங்கோவில் மட்டுமே அதிகமாகக் காணப்படுகின்றது.

நைஜீரியா ஆபிரிக்காவின் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. பெட்ரோலியத்தை இலகுவில் பிரித்தெடுக்கக் கூடிய அளவு நைஜீரிய எண்ணெய் தரமானது. நெதர்லாந்து அரச குடும்பத்தின் முதலீட்டில் இயங்கும் ஷெல் நிறுவனம், பெருமளவு நைஜீரிய எண்ணெய்யை அகழ்ந்து சர்வதேச சந்தையில் விற்று வருகின்றது.

ஐவரி கோஸ்ட் குடியரசு 40 ஆண்டுகளாக சர்வாதிகாரிகளினால் ஆளப்பட்டு வந்தாலும் நிலையான அரசு மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கண்ட நாடு. மரப்பலகை, கொக்கோ, கோப்பி போன்றவற்றின் ஏற்றுமதி வருமானம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி விட அயல்நாட்டவர்கள் இங்கு வேலை தேடி வந்த காலம் ஒன்றிருந்தது.

எந்தவித இயற்கை வளமும் இல்லாத ஐரோப்பிய நாடுகள் ஆபிரிக்காவில் இருந்து தருவித்த வளங்களை வைத்துதான் உலக சந்தையை தமது விற்பனை பண்டங்களால் நிரப்பி வருகின்றது. என்பது உலகமக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இரண்டாம் உலக போரில் நடந்த யூத இன அழிப்பிற்கு பின்னர் இன்று உலகம் ஆபிரிக்காவின் மாபெரும் இனப்படுகொலையை பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் ருவாண்டாவில் பெரும்;பான்மையான ஹீட்டு இனம் சிறுபான்மை இனமான துட்சி இனத்திற்கு எதிராக நடந்த உள்நாட்டுப்புரட்சியில் ஹீட்டு இனத்திற்கு பிரான்சும் துட்சி இனத்திற்கு அமெரிக்காவும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவி செய்து வருகின்றது. இவ்வாறு ஆயுதங்கள் கொடுத்து உதவி செய்வது போல் பாசாங்கு செய்வதற்கு காரணம் ஆபிரிக்கநாடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்கு என்று எம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

ஐரோப்பியர்கள் தங்கள் நாகரிகத்தின் தொட்டில் கிரேக்கம் என கூறுவது போல, ஆபிரிக்கர்களுக்கு அவர்களது நாகரிகத்தின் தொட்டில் எத்தியோப்பியா. அதனால் தான் எத்தியோப்பியாவின் பண்டைய மூவர்ணக்கொடியானது ‘அகில ஆபிரிக்க ஒன்றியக் கொடியாக’ பல நாடுகளால் சுவீகரிக்கப்பட்டது. செங்கடலோரப் பிரதேசம் முழுவதையும் கொண்டுள்ள எரித்திரிய நாட்டின் துறைமுகங்களை எத்தியோப்பியா தாராளமாகக் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒப்பந்தம் போட்டதால் ஐ.நா வாக்கெடுப்பின் மூலம் எரித்திரியா சுதந்திர நாடாவதற்கு புதிய எத்தியொப்பிய அரசு சம்மதித்தது. இந்நிலையில் பல்வேறு அரசியல் பொருளாதார காரணங்களால் எத்தியோப்பியாவுக்கும் எரித்திரியாவுக்கும் இடையிலான உறவு விரிசல் ஏற்பட்டது. அதுவரை தீர்க்கப்படாத எல்லைக்கோடு பற்றி சர்ச்சை ஏற்பட்டது. முதன்முதலில் எரித்திரிய படைகள் எல்லைப்புற பிரதேசங்களை ஆக்கிரமித்தன. எத்தியோப்பியா வெளிநாடுகளில் ஆயுதங்களை வாங்கி போட்டு திருப்பி தாக்கியது. ஒன்றுமில்லாத வெறும் கட்டாந்தரைக்காக இரு இராணுவங்களும் ஆண்டுக்கணக்காக மோதிக்கொண்டன. இரண்டு நாடுகளும் அமெரிக்காவின் உதவி பெறும் ஆபிரிக்க செல்ல பிள்ளைகள் என்பதால் அமெரிக்கா மத்தியஸ்தத்துடன் போர் முடிவுக்கு வந்தது. தற்போது ஐ.நா சமாதானப்படை எல்லைகோடு நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சோமாலியாவில் இருந்து பிரிக்கப்பட்டு எத்தியோப்பியாவுடன் இணைக்கப்பட்ட தனது பிரதேசமான ஒக்டெனை மீண்டும் சோமாலியாவோடு இணைக்க வேண்டும் எனும் வேண்டுகோள் சோமாலியாவினால் எத்தியோப்பியாவுக்கு விடுவிக்கப்பட்டது. எத்தியோப்பியா கென்யா ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிய, எத்தியோப்பியா மீது போர் தொடுத்தது. சோமாலியா 1977இல் ஆரம்பமான இப்போரை பயன்படுத்தி அன்றைய வல்லரசுகள் (அமெரிக்கா , ரஸ்யா) குளிர்காய சோமாலியாவை தளமாகக் பயன்படுத்த தொடங்கினர்.

உலக நாடுகள் ஆலோசனை பெறாமல் தன்னியச்சையாக போரில் குதித்ததாக சோமாலியாவை உலக நாடுகள் பலவும் பகைத்துக் கொள்ள எத்தியோப்பியாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியனும் சோமாலியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயற்பட இரு வல்லரசுகளின் பனிப்போர் போட்டிக்கு, இரையானது எத்தியோப்பியாவும் சோமாலியாவும்.

தனது சொந்த இனமே சிறந்தது என்ற இனவாதம் நிகழ்கால அரசியலைத் தீர்மானிக்கின்றது. சியாரா லியோன், லைபீரியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர்கள் சிறந்த உதாரணம். இவ்இனங்களுக்கிடையிலான யுத்தங்களில் ஐரோப்பிய ஆயுத வியாபாரிகள் கொள்ளை இலாபம் சம்பாதித்தார்கள்.
ஆபிரிக்க கண்டத்தை பட்டினிச்சாவு நிறைந்த வறண்ட பூமியாக ஒரு பக்கம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம், ஐரோப்பா தனது உணவுத் தேவைகளுக்காக ஆபிரிக்காவில் தங்கி இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மீன்பிடி வள்ளங்கள், மேற்கு ஆபிரிக்கா கடல்களில் கேட்பாரற்று மீன்களை அள்ளிச் செல்கின்றன. தினசரி மரக்கறிகளையும், பழங்களையும் ஆபிரிக்கா ஏற்றுமதி செய்வதை நிறுத்தினால் ஐரோப்பியர்கள் உருளைக்கிழங்கையும், ஆப்பிளையும் தான் சாப்பிட வேண்டியிருக்கும். ஆபிரிக்க கண்டம் முழுவதும் முரண்பாடுகளின் பூமி தான். பாலைவன வளைகுடா நாடுகள், சூடானில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு தமது மக்களுக்கு உணவிட்டு வருகின்றனர். அதே நேரம் சூடான் டார்பூர் பிராந்திய மக்கள் தமது அன்றாட உணவுக்காகத் தொண்டு நிறுவனங்களிடம் கையேந்துகின்றனர்.

நைஐPரியாவும் , அங்கோலாவும் பிரதான எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள். ஆனால் அந்நாடுகளில் பெரும்பான்மை மக்கள் ஏழைகளாக அல்லலுறுகின்றனர். உலகில் விலை உயர்ந்த விற்பனை பண்டங்களில் ஒன்றான எண்ணெய்யை விற்று வரும் இலாபம் அக்காலத்தில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தின் கைகளில் மாத்திரமே போய்ச் சேருகின்றது. ஆபிரிக்க நாடுகளில் எல்லாம் இந்த ஏற்றத்தாழ்வைக் காணலாம். அதிகாரத்திற்கு வந்தால் எமது நாட்டு வளங்களை அந்நிய நாடுகளுக்கு விற்று பணக்காரனாகலாம். என்ற எளிய தத்துவமே பல ஆயுதக்குழுக்கள் உருவாகக் காரணமாக உள்ளது. போர்வீரனாக ஆயுதம் ஏந்த வருபவர்கள் கூட அதிக ஊதியம் எதிர்பார்ப்பதால் தான் யுத்த பிரிவுகள் குழந்தைப் போராளிகளைச் சேர்க்கின்றனர்.

ஆபிரிக்காவின் பிரச்சினைகளை அங்கே காளான் போல முளைத்துள்ள அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் தீர்த்து விடப்போவதில்லை. அல்லது மத நம்பிக்கையாளர்கள் நினைப்பது போல இன்று ஆபிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கிறிஸ்தவ மதம் மக்களை வறுமையில் இருந்த விடுதலை செய்யப்போவதில்லை. ஆபிரிக்காவை வளப்படுத்த மக்களுக்கு தொழினுட்ப அறிவு தேவை. அதை கொடுக்க மேற்குலகம் மறுத்து வருகின்றது. இப்போதும் காலனிய காலத்தில் நடந்தது போல, மலிவு விலையில் மூலப்பொருட்களைப் பெற்று அதிக விலையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

‘நமது நாடு இயற்கை வளம் நிறைந்தது. அது தான் எமது சாபக்கேடு’ என்று பல ஆபிரிக்கர்கள் குமுறுகின்றனர். வளங்களைச் சூறையாட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் போட்டி போடுகின்றன. ஆபிரிக்க தலைவர்கள் உள்ளுர் தரகு முதலாளிகளாக செயற்படுகின்றனர். ஆபிரிக்க கண்டத்தில் நடக்கும் இனவெறிப்போர்கள் (உ.ம்: ருவாண்டா), மதவெறிப்போர்கள் (உ.ம்: சூடான்), சித்தாந்தப் போர்கள் (உ.ம்: அங்கோலா) இவைகள் எல்லாமே வளங்களை யார் கைப்பற்றுவது என்ற போட்டிக்கு மேல் போடப்பட்டிருக்கும் மாயத்திரைகள். இந்தப்போர்களினால் பாதிக்கப்படுவது, வழமை போல அப்பாவி மக்கள் தான். ஓரளவு வசதி உள்ளவர்கள் இன்னல்களில் இருந்து தப்புவதற்காக ஐரோப்பா செல்ல நினைத்தால் அங்கே ஐரோப்பிய ஒன்றியம் என்ற கடுமையாக பாதுகாக்கப்பட்ட கோட்டை மதில்கள் தடுக்கின்றன.

ஆபிரிக்காவின் பிரச்சினையை பிராந்திய ஒருமைப்பாட்டால் தீர்க்கலாம் அல்லது அந்த பாதையில் எடுத்து வைக்கப்படும் முதல் அடி அது என்று பல சமூக ஆர்வலர்கள் நம்புகின்றனர். பலர் ஐரோப்பிய ஒன்றியக் கட்டமைப்பை ஒத்த ஆபிரிக்க ஒன்றியத்தை தமது நீண்ட காலக் கனவாகக்; காண்கின்றனர். இது குறித்த மாநாடுகள் நடைபெறும் போது எல்லாம் ‘ மேற்குலகில் கையேந்தும் பிச்சைக்கார நாடுகள் ஒன்று கூடி எதனைச் சாதிக்கப் போகிறார்கள்?’ என்று சில மேலைநாட்டு ஊடகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஐக்கிய ஆபிரிக்க கூட்டமைப்பிற்கு பாடுபட்ட கடாபி இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது ‘ பல ஆபிரிக்க நாடுகளும், இனங்களும் பரம எதிரிகளாக தமக்குள் மோதிக் கொள்கின்றனர் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பியக் கண்டமும் அதே நிலைமையில்தான் இருந்தது என்பது எம்மவர் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆபிரிக்க நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் அதிகரிக்கும் போது, மேற்குலகில் கையேந்த வேண்டிய தேவை அவர்களுக்கும் இருக்காது.’ என்றே குறிப்பிட்டார்.

இவ்வாறு மேற்குலக நாடுகளின்; சதிகளினால் ஆபிரிக்க நாடுகள் பழியாகுவதற்கு காரணம் ஆபிரிக்க நாடுகளிடையே ஒற்றுமையின்மையே ஆகும். ஆபிரிக்க ஒற்றுமை நடைமுறைச் சாத்தியமா? தனக்கு காலனிய மனோபாவம் இருப்பதாக பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் பிரான்ஸ் முதல் முன்பு பனிப்போர் இப்போது சுதந்திர வர்த்தகம் என்ற சாட்டுகளைக் கூறி தலையீடு செய்யும் அமெரிக்கா வரை தொலைதூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் அரசியலை இன்னும் கைவிடவில்லை. ஆபிரிக்க நாடுகளில் ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் ஏதோ ஒரு வல்லரசின் கைம்பொம்மைகளாக இருப்பதைப் பார்க்கலாம். உலகம் முழுவதும் ஐனநாயகத்தைப் போதிக்கும் மேற்குலகம், ஆபிரிக்க நாடுகளில் சர்வாதிகாரிகளை ஆதரித்து வருகின்றது. மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் கூட பதவியில் இருந்து பலாத்காரமாக அகற்றப்பட்டனர். அந்த இடத்தில் கொடுங்கோல் சர்வாதிகாரிகளைக் நியமித்தனர்.

ஆபிரிக்க நாடுகளின் அரசியல் அதிகாரம் இன மத முரண்பாடுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. காங்கோ அனைத்து வளங்களையும் கொண்ட செல்வந்த நாடு. உலகில் உள்ள வெப்ப குளிர் காலநிலைகளுக்கேற்ற அத்தனை பயிர்களும் வளரக்கூடிய தரைகளைக் கொண்ட காங்கோ, விவசாயத்தில் தன்னிறைவு கண்டால் 50 மில்லியன் சனத்தொகைக்கு உணவு கொடுப்பது பெரிய விடயமல்ல. அங்கே பெட்ரோல், எரிவாயு போன்ற எரிபொருட்கள் கூட கிடைக்கின்றன. காலனிய காலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்திய கொள்ளை, அனைத்து வளங்களையும் கொண்ட காங்கோ இன்று வறுமையான நாடுகளில் ஒன்றாக இருப்பதற்கு காரணம், காங்கோவின் பொருளாதாரம் முழுவதும் ஏற்றுமதி செய்வதற்காகவே காலனிய எஜமானர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதைவிட இன்றைய காலக்கட்டத்தில் ஆண்டுக்கணக்காக நிலவும் அராஜக சூழ்நிலையும் ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகமும் பிற காரணங்களாலும் ஏனைய ஆசிய, ஐரோப்பிய நாடுகளைப் போல் ஆபிரிக்க நாடுகள் வல்லரசு நிலைக்கு வரமுடிவதில்லை.

இன்றைய ஆபிரிக்காவின் வளங்களை, பன்னாட்டு நிறுவனங்கள் கேள்வி கேட்க யாருமின்றி கொள்ளையடிக்கின்றன. ஆயுதமேந்தி இருப்பது அரசபடையாக இருந்தாலும் ஆயதக்குழுக்களாக இருந்தாலும் இந்த வளங்களை யார் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்பதற்காக தான் போட்டியிடுகின்றன. ‘ ஆபிரிக்கா அப்படியே இருந்தால் அங்கே புரட்சி ஏற்பட இன்னும் நூறு ஆண்டுகளாகும்’ என்று தனது டைரிக் குறிப்பில் எழுதி வைத்தார் சேகுவாரா. அவர் காங்கோவில் தங்கியிருந்து புரட்சியை ஏற்படுத்த முயன்று தோற்று போய் திரும்பியவர். இப்போது ஒரு புதிய திருப்பம். இஸ்லாமிய மீட்புக்காக போராடுவதாக சொல்லும் குழுக்கள் வளர்ந்து வருகின்றன. அதைக் காட்டி பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவதாகச் சொல்கிறது அமெரிக்கா.

இனவாதம், நிறவாதம் என நாகரிக உலகம் வெறுக்கும் அரசியல் கொள்கைகளைக் கண்டுபிடித்து அதை ஆபிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து, ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதிலும் அவர்கள் கெட்டிக்காரர்கள். இரத்தம் சிந்தும் இன்றைய இன மத பிரச்சினைகள் பல ஐரோப்பிய காலனிய காலத்தில் உருவானவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

19ஆ;ம் நூறு;றாண்டின் பிற்பாடு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள், உள்ளுர் கறுப்பர்கள் சிலரைத் தமது முகவர்களாக அமர்த்திக் கொண்டனர். அவர்களது வேலை நாட்டின் உட்பகுதிக் கிராமங்களை சுற்றி வளைத்து, திடகாத்திரமான உழைக்கும் வயதில் உள்ள ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக பிடித்து வந்து விற்பது ஆகும். அந்தவகையில் நைஜீரியாவிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் இவ்வாறு அடிமைகளாக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு விட்டதால் ஒரு காலத்தில் அந்நாட்டின் மத்திய பகுதியில் இளமையான உழைப்பாளிகளைக் காண்பது அரிதாக இருந்தது. ஆபிரிக்க நாடுகள் அபிவிருத்தியில் பின்தங்கியமைக்கு இதுவும் ஒரு காரணம்.

சில ஆபிரிக்க நாடுகள் வளங்களை கொண்டிருப்பினும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. நைஜீரியாவில் எண்ணெய் ஏற்றுமதியின் ஒருபகுதி இலாபம் ஆளும் வர்க்கத்தின் பாக்கெட்டுக்குள் போவதால் பொது மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை. மொத்த உற்பத்தியில் பத்து சதவீதம் உள்நாட்டு பாவனைக்கு ஒதுக்கப்பட்டாலும் அங்கே பற்றாக்குறை நிலவுகின்றது. பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீணட வரிசையில் காத்திருக்க வேண்டிய நேருவதும் அடிக்கடி; விலை உயர்வதும் நைஜீரியா உண்மையிலே எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடா? என சந்தேகம் எழும். உள்ளூர் பாவனைக்கு தேவையான பெரும் பகுதி பெட்ரோல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. மோசமான முகாமைத்துவத்தை கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், அயல்நாடுகளுக்கு கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்றல் போன்ற காரணங்களால் இந்தத் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. நைஜீரிய மக்கள் எண்ணெய் குழாய்களை துளையிட்டு எண்ணெய் திருடத் தொடங்கினர். அல்லது குழாய்களைச் சேதமாக்கி விட்டு, கம்பெனி ஊழியர்கள் வரும் வரை காத்திருந்து அவர்களைப் பிடித்து சிறை வைத்தனர். சில நேரம் இது போன்ற அழிவு வேளைகளில் சிக்கி பொது மக்கள் மரணமடைவதும் உண்டு. ஆயினும் அவர்களுக்கு எண்ணெய் கம்பெனிகளை எதிர்த்துப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. எண்ணெய் வளம் அவர்களது வாழ்ககையை வளப்படுத்த செலவிடப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையே அவர்களது போராட்டம். சில தன்னிச்சையான ஆயுதக் குழுக்கள் எண்ணெய் கம்பெனி ஊழியர்களைக் கடத்தி தமது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வைத்தனர். கென் சரவிவ என்ற காந்திய வழியில் போராடிய ஒருவர் நைஜீரிய பாதுகாப்பு படையினரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சர்வதேச மன்னிப்புச் சபை நைஜீரிய பிரச்சினையை உலகறிய வைத்தது. அந்தக் கொலையில் ஷெல் நிறுவனமும் சம்பந்தப்பட்டிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஆபிரிக்க நாடுகள் ஏனைய நாடுகளுடன் சர்வதேச ரீதியில் தொடர்புகளை மேற்கொள்ள முனையும் போது மேற்குலகுநாடுகளால் சதிப்புரட்சி மேற்கொள்ளப்படுகின்றது உதாரணமாக ஐவரி கோஸ்ட் மன்னாள் பிரெஞ்சு காலணியாக இருந்த சுதந்திரம் பெற்ற நாடாகும். இந் நாட்டில் பொது தேர்தலில் ஐனாதிபதியாக லோரன்ட் குபாக்போ பதவி ஏற்றதன் பின்னர் பிரான்சை தாய்நாடாக பார்க்கும் நிலையில் இருந்து விலகி உள்நாட்டுப் பொருளாதார கட்டுமானங்களை சீரிதிருத்தும் சமூக பொருளாதாரத் திட்டங்களை வகுத்தார். அத்துடன் எல்லாவற்றுக்கும் பிரான்சிலே தங்கியிராமல் சீனா, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளுடன் நட்புறவுகளை வளர்த்தமையானது பாரிசிற்கு எச்சரிக்கை சமிக்கையாக எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஐவரி கோஸ்ட்டின் ஐனாதிபதி பதவி விலக புதிய தேர்தல் நடாத்தப்படுவதற்கும் உதவியதுடன் தனது நெருங்கிய நண்பரான ஓவாத்ராவை வேண்டிய பணம்; செலவழித்து ஆட்சிபீடமும் ஏற்றியது.

வேலையை வேகமாக முடிக்காததால் வெட்டப்பட்ட கறுப்பின மக்களின் கைகளில் றப்பர் பால் வழியும் காங்கோ, கறுப்புத்தோலை உரித்துஎடுக்கும் சூடானின் கட்டித்தங்கங்கள், உலகுக்கே கோப்பியை ஏற்றுமதி செய்துவிட்டு எலும்பும் தோலுமாய் சாவை இறக்குமதி செய்யும் எத்தியோப்பியா, இப்படி ஆபிரிக்க துயரங்களுக்கு முக்கிய காரணம் ஐரோப்பிய சுரண்டல்கள் ஆகும்

மனிதனின்; தோற்றத்திற்கும் பரிமாணத்திற்கும் வித்திட்ட ஆபிரிக்க கண்டமானது தற்போது மிகவும் பின்தங்கிய நிலையில் வறுமைக்கோட்டிற்கும் கீழ் வாழ்கின்றதெனில் அங்கு நிலவுகளின் ஊழல் மிக்க அரசியல்வாதிகளின் சர்வாதிகார ஆட்சியாகும். அங்கு நிலவும் ஊழல் ஆட்சியினை பயன்படுத்தியே உலக வல்லரசு நாடுகள் மேலும்மேலும் ஆபிரக்காவினை வறுமை குழிக்குள்ளும் தீவிரவாத பிடிக்குள்ளும் மறைமுகமாக தள்ளுகின்றன.

ஆபிரிக்க நாட்டு தலைவர்கள் ஊழல் ஆட்சியினை கைவிட்டு ஜனநாயக ரீதியில் ஆட்சி நடைபெற்றால் அங்கு அரசியல் பிரச்சினைகள் ஒழிக்கப்படுவதுடன் சர்வதேச ரீதியில் மதிப்பும் பெற்றுகொள்ளமுடியும். அத்துடன் ஆபிரிக்க நாடுகள் தற்போது நவகாலணித்துவத்திற்குட்பட்ட நாடுகளாக திகழ்கின்றன. எனவே அவ்வாறான நாடுகள் நவகாலணித்துவத்திலிருந்து விடுபட்ட சுயாட்சியை நிறுவிக்கொண்டால் சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வழிவகுப்பதுடன் நாடுகள் அபிவிருத்தியினையும் நோக்கச் செல்ல முடியும் என்பது எனது சொந்தக் கருத்தாகும்.

உண்மையில் ஐரோப்பா தான் ஆபிரிக்காவில் தங்கி இருக்கின்றது. ஆபிரிக்காவில் வாங்கப்படும் மலிவு விலை மூலப்பொருளுக்கும் சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த பொருளுக்கும் இடையில் கிடைக்கும் நிகர லாபம் தான் ஐரோப்பாவில் செல்வத்தை குவித்து வருகின்றது. ஆபிரிக்கா மட்டும் இல்லையென்றால் ஐரோப்பியர்கள் வறுமையில் வாட வேண்டிய இருக்கும். லைபீரரியாவிலும் சியாரா லியோனிலும் வைரக்கற்களுக்காக, கொங்கோவில் கணிப்பொறி சிப்களுக்காக. இவ்வாறாக ஐரோப்பியச் சந்தைகளை நிரப்பும் உணவுப் பொருட்களின் பெரும்பகுதி ஆபிரிக்காவில் இருந்துதான் வருகின்றது. நாளாந்தம் ஆபிரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் உணவை விழுங்கும் ஐரோப்பியர்கள் அங்கே பட்டினியால் வருந்தும் மக்களுக்கு உதவி செய்கிறார்களாம். எனவே மேற்கத்தேய சுரண்டல்களில் இருந்து விடுபட்டு சுயமாக வாழப்பழகிக் கொள்வதே ஆபிரிக்க நாடுகளின் முன்னேற்றத்திற்கும் வழியாகும்.

சுரேஸ்குமார் சஞ்சுதா
கிழக்குப்பல்கலைகழகம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More