Home உலகம்ஒபாமாவின் சட்டத்தினை இல்லாமலாக்கும் டிரம்ப்பின் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு.

ஒபாமாவின் சட்டத்தினை இல்லாமலாக்கும் டிரம்ப்பின் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு.

by admin

அமெரிக்காவில் இளம் குடியேற்றவாசிகளை நாடு கடத்துவதில் இருந்து பாதுகாக்கும் குடியேற்ற கொள்கையை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் மேற்கொள்ளும் திட்டத்திற்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குடியேற்ற கொள்கை திட்டத்திற்கு தடை விதிப்பது என்பது சட்டவிரோதமானது எனத் தெரிவித்து அமெரிக்க உச்ச நீதி மன்றம் இவ்வாறு டிரம்பிற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது.

சிறுவயதில் அமெரிக்காவிற்குள் குடியேறியவர்களை பாதுகாக்கும் (டாகா) திட்டத்தை நீக்குவது சட்டவிரோதமானது என அமெரிக்க கீழமை நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் அந்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

சுமார் 650,000 இளைஞர்கள், தங்கள் சிறுவயதில் ஆவணங்கள் எதுவுமின்றி அமெரிக்காவிற்குள் குடிபெயர்ந்துள்ள நிலையில் இவர்களை பாதுகாக்கும் ‘டிரீமர்ஸ்’ திட்டமும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது.

சிறுவயதில் ஆவணங்கள் எதுவுமின்றி அமெரிக்காவில் குடியேறியவர்களை பாதுகாத்து, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கும் திட்டத்தை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த 2017ஆம் ஆண்டு அமுல்படுத்தினார்.

ஒபாமா நிறைவேற்றிய இத்திட்டத்தை ஏன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்கான சரியான விளக்கத்தை வெள்ளை மாளிகை வழங்கவில்லை என்பதனால் சட்டத்திற்கு உட்பட்ட திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அரசாங்கம் தன்னிச்சையாக, செயல்பட முடியாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. #ஒபாமா #டிரம்ப் #நீதிமன்றம் #தீர்ப்பு #குடியேற்றகொள்கை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More