Home இலங்கைமலையக புகையிரதசேவைகள் பாதிப்பு

மலையக புகையிரதசேவைகள் பாதிப்பு

by admin

(க.கிஷாந்தன்)

கொழும்பு – பதுளை பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் அம்பேவெல – பட்டிப்பொல ஆகிய புகையிரத நிலையத்திற்கு இடையில் இன்று (23.06.2020) மதியம் 1.30 மணியளவில் ஏற்பட்ட புகையிரத தடம் புரள்வு காரணமாக மலையக புகையிரத  சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை பயணிகளை ஏற்றிச்சென்ற புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியிருந்தனர். அதன்பின் மற்றுமொரு புகையிரதத்தின் மூலம் சுமார் ஒரு மணித்தியாலயங்களின் பின் பயணிகள் தமது பயணங்களை மேற்கொண்டனர்.

எனினும் புகையிரத பாதையை சீர் செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும், அதன்பின் மலையக ரயில் சேவைகள் வழமைப்போல் செயற்படும் என புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #மலையக  #புகையிரதசேவை  #தடம்புரள்வு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More