181
மன்னார் மடு மாதா திருத்தலத்தில் 2020ஆம் ஆண்டு ஆடி 02 ஆம் திகதி இடம் பெறவுள்ள ஆடி மாத திருவிழாவுக்கான இரண்டாவது திட்டமிடல் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(25.06.2020) மடுமாதா திருத்தலத்தின் புனித யோசேவ்வாஸ் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் திருவிழாவுக்கான திட்டடமிடல் கலந்துரையாடல் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி பி.ல.இம்மானுவேல் ஆண்டகை,மடுமாதா திருத்தலப் பரிபாலகர் அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை அடிகளார்,மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி.அ.விக்ரர் சோசை அடிகளார், கிறிஸ்தவ சமய பணிகள் திணைக்களத்தின் இயக்குனர் திருமதி சத்துரி பின்ரோ, மாந்தை பிரதேச சபை தவிசாளர் ஆசீர்வாதம் சந்தியோகு,,மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளா,; சுகாதாரத் திணைக்கள உயர் பொறுப்பு நிலைப் பணியாளர்கள், மடுப் பிரதேசச் செயலர் செல்வி வினிஜித்தா கௌசிகன் , மடுப் பிரதேச செயலகப் பணியாளர்கள், முப்படைகளின் அதிகாரிகள், மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, அரச தனியார் போக்குவரத்துப் பிரிவினர் மற்றும் பல்துறைசார் பொறுப்பு நிலைப் பணியார்களும் கலாந்து கொண்டு திருவிழாவுக்கான தங்கள் துறைசார் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தனர்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை ,,,,
அரச அனுசரனையுடன் ஆண்டுதோறும் நடைபெறும் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள யாத்திரிகர் ஸ்தலமான மருதமடு மாதாவின் ஆடி மாத பெருவிழாவில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள முடியும்.
வுழமை போல் இவ் திருவிழாத் திருப்பலி ஆடி மாதம் இரண்டாம் திகதி (02.07.2020) காலை 6.15 மணிக்கு நடைபெறும்.
இங்கு திருவிழா நாள் அன்று நடைபெறும் திருவிழா திருப்பலிக்கு பக்தர்கள் வந்து செல்லலாம். ஆனால் கோவிட் 19 காரணமாக ஒரு திருப்பலியில் ஆயிரம் பேர் மாத்திரம் கலந்து கொள்ள முடியும். ஆகவே இந்த திருப்பலிகளுக்கு வருகின்றவர்களை நாங்கள் அழைத்து நிற்கின்றோம். ஆயிரம் பேருக்கு மேல் இவ் திருப்பலியில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது.திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து காலை 8.30 ம மற்றும் 10.30 ஆகிய இருநேரங்களில் திருப்பலிகள் நடாத்தப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே குறித்த திருப்பலிகளில் பக்தர்கள் வந்து கலந்து கொள்ள முடியும்.
பெருவிழா நாளில் மருதமடு மாதாவின் ஆலயம் வரும் பக்தர்கள் அரசு மக்களுக்கு தெரிவித்திருக்கும் அறிவுரைகளுக்கு அமைவாக சுகாதாரத்தை கடைப்பிடித்தவர்களாக முக கவசம் அணிந்தவர்களாக கைகளை நன்கு கழுவியவர்களாகவும் சமூக இடைவெளியை பின்பற்றி இவ் விழாவில் கலந்து கொள்ள முடியும்.
திருவிழா நாளான ஆடி இரண்டாம் திகதி அன்று காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
திருப்பலியில் கலந்து கொள்ள முடியாத பக்தர்களின் நலன் கருதி அரச ஊடகமான ரூபாவாகினி தொலைக்காட்சியூடாக ஒளிபரப்பப்படும் போது பக்தர்கள் அதன் மூலம் அன்னையின் ஆசீரை பெற்றுக் கொள்ளலாம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேலும் தெரிவித்தார். #மடுமாதா #திருவிழா#திருப்பலி #கோவிட்19
Spread the love