Home இலங்கையாழ் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து ஓமந்தையில் விபத்திற்கு உள்ளானது…

யாழ் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து ஓமந்தையில் விபத்திற்கு உள்ளானது…

by admin

வவுனியா ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று (27.06.20) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 15 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் ஏனைய 5 பேரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான காரணம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ஓமந்தை காவற்துறையினர்  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More