Home சினிமாபொய்யால் என்னை கொல்லாதீங்க

பொய்யால் என்னை கொல்லாதீங்க

by admin


இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி எஸ் ஜானகியின் உடல்நிலை பற்றிய வதந்தி நேற்று மதியம் முதல் பரவத்தொடங்கிய நிலையில், ஜானகி அவர்கள் வதந்திகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

எஸ். ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் 17 மொழிகளில் பல ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியதுடன் நான்கு தேசிய விருதுகள், 33 மாநில விருதுகள் எனப் பெற்று 55 ஆண்டு காலத்துக்கும் மேல் இசைத்துறையில் வலம் வருபவர். 2016ஆம் ஆண்டு திரையுலகிலிருந்து தான் விலகுவதாக அறிவித்த ஜானகி ஹைதராபாத்தில் தனது மகன் முரளி கிருஷ்ணனுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் முதல் ஜானகி அம்மாள் உடல்நிலை குறித்து மீண்டும் வதந்தி உருவானதுடன் அவர் ; மறைந்துவிட்டார் என்றும் வதந்திகள் சமூக வலைதளங்களில் வதந்தி பரவின.

இந்தநிலையில் குறித்த வதந்திக்கு மறுப்புத் தெரிவித்துள்ள ஜானகி எதற்கு இந்த மாதிரி செய்தியை வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இது முதல் முறையல்ல, 6 வது முறை. சும்மா அநாவசியமாக வேண்டுமென்றே செய்து கொண்டிருக்கிறார்கள். முன்னதாக இதே மாதிரி செய்தி வந்த போது வாட்ஸ்-அப்பில் பேசி அனுப்பினேன். இந்த மாதிரி வதந்திகள் எல்லாம் வேண்டாம். இந்த மாதிரி செய்தி எல்லாம் கேட்டால் சிலருக்கு உடல்நிலை பாதிக்கும். இந்த மாதிரி பொய் எல்லாம் சொல்லி என்னை நீங்க கொல்லாதீங்க என்று நல்லா திட்டியிருந்தேன். ;. மறுபடியும் இப்படி செய்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார். #பொய்  #ஜானகி #பாடகி #வதந்தி

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More