பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிற்கும் வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்சுக்குமிடையில் இன்றையதினம் சந்திப்பு சந்திப்பொன்று நடைபெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கொரோனா முடக்க செயற்பாடுகளின் பின்னர் வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையினை வழமைக்கு கொண்டுவருவது குறித்து தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களை தடுத்து நிறுத்துவது தொடர்பிலும் வட மாகாண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #பிரதமர் #ஆளுநர் #சந்திப்பு #கொரோனா