154
கடந்த வருடம் வழங்கப்பட்ட செயல் திட்ட உதவியாளர்கள் நியமானம் தற்காலிகமாக கடந்த வருடமே நிறுத்தி வைக்கப்பட்டது. தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சினுடாக பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டது. எனினும் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்ற காரணத்தினால் குறித்த நியமனம் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.எனினும் தேர்தல் முடிவடைந்து பல மாதங்களாகியும் அவர்களுக்கான நியமனாம் மீண்டும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் அனைவரும் ஒன்றிணைந்து இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்தனர்.
இதன் போது தமக்கு இது வரை எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில் அகில இலங்கை செயல்திட்ட உதவியார் சங்கம் சார்பாகவும் மன்னார் மாவட்ட செயல்திட்ட உதவியாளர்கள் சார்பாகவும் குறித்த மகஜர் அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கும்,பிரதமருக்கும் வழங்கும் வகையில் கையளிக்கப்பட்டதாவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நியமனத்தை பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர்.
மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்,,,
கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவதற்கு முன்னர் குறித்த நியமனம் வழங்கி வைக்க இருந்த போது தேர்தல் ஆணைக்குழுவினால் குறித்த நியமனங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. -ஆனால் பின்னர் குறித்த நியமனம் வழங்கப்படவில்லை.இவ்விடையம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் வழங்க வேண்டிய மகஜர் உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.அதனைத்தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம். என அரசாங்க அதிபர் தெரிவித்தார். #மன்னார் #உதவியாளர்கள் #கையளிப்பு #அரசஅதிபர்
Spread the love