216
யாழ்ப்பாணம், கோப்பாய் சந்தி அருகில் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் கராச்சில் டிப்பர் வாகனத்தின் கீழ் பகுதியில் பழுது பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் மீது டிப்பர் வாகனத்தின் பெட்டி வீழ்ந்ததில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் சுமை பெட்டியை ஜக் மூலம் தூக்கிவிட்டு அதன் கீழிருந்து பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது ஜக் நழுவி பெட்டி இளைஞன் மீது கீழ் இறங்கியுள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் பகுதியை சேர்ந்த ஓ.லிகிந்தன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love