Home இலங்கைதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் முற்றுகை…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் முற்றுகை…

by admin

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் பகுதியில் உள்ள அலுவலகத்தை, இராணுவம் மற்றும் காவற்துறையினர் முற்றுகையிட்டு, அங்கிருந்தவர்களை மிரட்டும் தொனியில் எச்சரித்துள்ளனர். குறித்த நடவடிக்கையில் 50 ற்கும் மேற்பட்ட இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இன்றைய தினம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலி நாள் என்பதால் குறித்த அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கிலேயே மேற்படி முற்றுகை நடத்தப்பட்டுள்ளது என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “இன்று காலை அலுவலகத்திற்கு வந்த யாழ்.காவல்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் கரும்புலி நினைவேந்தல் நடத்தக் கூடாது என்று எங்களையும் எச்சரித்து சென்றுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More