172
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்துக்கு அண்மையாக உள்ள மரியன்னை தேவாலய (பெரிய கோயில் ) வளாகத்தினுள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கை இன்று நண்பகல் இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அவர் தற்போது, தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
மன்னார் பேசாலை தேவாலயத்தில் நேற்றுமுன்தினம் நடமாடிய மர்ம நபர் தொடர்பில் வடக்கு மாகாணம் முழுவதும் விசாரணைகள் முடக்கிவிடப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது #யாழ் #பெரியகோயில் #கைது #ஆயர்இல்லம் #பேசாலை
Spread the love