Home இலங்கைஅரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம்

அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து – இருவருக்கு பலத்த காயம்

by admin

(க.கிஷாந்தன்)

ஏறாவூர் பகுதியிலிருந்து நுவரெலியா வழியாக பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (06.07.2020 ) காலை 10.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர். லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், படுங்காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த லொறியில் இருந்த 400 அரிசி மூட்டைகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு லொறிக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர்மேற்கொண்டு வருகின்றனர். #அரிசி  #லொறி #விபத்து #காயம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More