Home உலகம்இந்தோனேசியா -சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

இந்தோனேசியா -சிங்கப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

by admin

இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இன்று அதிகாலை 4.24 மணியளவில ரிக்டர் அளவுகோளில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சிங்கப்பூர் நகரின் தென்கிழக்கே 1,102 கிலோ மீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்தோனேசியாவின் சிமராங் பகுதியில் இருந்து வடக்கே 142 கிலோ மீட்டர் தொலைவிளை மையமாக கொண்டு ரிக்டர் அளவுகோளில் 6.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.  #இந்தோனேசியா  #சிங்கப்பூர்  #நிலநடுக்கம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More