Home உலகம்பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO  

பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா – வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது – WHO  

by admin

பிரேசில் ஜனாதிபதி ஜேர் போல்சோனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனது வழக்கமான அலுவலக பணிகளை மேற்கொள்ள அலுவலகம் செல்லாத நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலகமே கொரோனா குறித்து அச்சத்தில் இருக்கும் போது, மக்கள் சமூக விலகல், முகக்கவசம்அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என ஜேர் போல்சோனாரோ பிரச்சாரம் செய்திருந்தார்.

மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருந்தால், கொரோனா ஏற்படுத்தும் பாதிப்பைவிட மோசமான பாதிப்பு பொருளாதார முடக்கத்தால் ஏற்படும். மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என தொடர்ந்து போல்சனாரோ பேசி வந்தார்.

அவர் .தலைநகர் பிரேசிலியாவை விட்டு வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் உத்தரவை அவர் மதிக்காவிட்டால் அவர் நாள்தோறும் 390 டொலர் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது அவர் கொரோ தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் சிரேஸ்ட அதிகாரியான மைக்கல் ரயான் பிரேசில் ஜனாதிபதி விரைவில் பூரண குணமடைய வேண்டி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

அதில் பிரேசில் ஜனாதிபதி; கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்த அனுபவத்தை சந்தித்துள்ளனர். இந்த சம்பவம் வைரஸ் குறித்த உண்மைத்தன்மையை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு நாம் அனைவரும் இலக்குகள் தான். வைரஸுக்கு அரசனா அல்லது பாமர ஏழையா என்று தெரியாது. வைரஸால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதையே இது காட்டுகிறது எனக் கூறியுள்ளார். #பிரேசில்  #ஜனாதிபதி #கொரோனா #WHO    #சமூகவிலகல் #முகக்கவசம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More