201
வட மாகாணத்தில் தற்போது பாரிய அளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாண மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த சோதனை சாவடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் மேஜர் ஜெனரல் கமால் குணவர்தனவிற்கு அவசர கடிதமொன்றை இன்று வியாழக்கிழமை (9)அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,
வட மாகாணத்தில் பாரிய அளவில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக குறித்து சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருப்பதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். மக்களின் அன்றாடச் செயல்பாடுகளும் பாதிப்படைந்து உள்ளது.
அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மக்கள் பயணங்களை மேற்கொள்வதிலும் பாரிய சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளனர். மேலும் மீனவர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் .
இந்த நிலையில் வட மாகாணத்தில் என்றுமில்லாத அளவில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ சோதனைச் சாவடிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் கூடிய கவனம் செலுத்தி வட மாகாண மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்புவதற்கு ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. #வடமாகாண #சோதனைச்சாவடிகள் #கமால்குணவர்தன
Spread the love