உலகம் பிரதான செய்திகள்

பிரித்தானியாவில் வரும் குளிர்கால மாதங்களில் கொரோனாவால் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும்


பிரித்தானியாவில் இவ்வருட இறுதியில் வரவுள்ள குளிர்கால மாதங்களில் கொரோனா தொற்றால் சுமார் 1.2 லட்சம் பேர் உயிரிழக்கூடும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தொற்று எண்ணிக்கை அடிப்படையிலும், இறப்பு எண்ணிக்கை அடிப்படையிலும் ஐரோப்பிய நாடுகளில் பிரித்தானியா முதன்மையான இடத்தில் உள்ளநிலையில் வரவுள்ள ; குளிர்கால மாதங்களில் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். இதனைத் தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை தற்போது இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என பிரித்தானியாவின் அகாடமி ஒஃப் மெடிக்கல் சயின்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது

வரும் செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு யூன் வரையிலான ஒன்பது மாதங்களில் சுமார் 1.2 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குளிர்காலத்தில் மக்கள் ஒரே இடத்தில் அடைந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதால் நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவும். இதன் விளைவாக நோய்த் தொற்று எண்ணிக்கை தற்போது இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகம் உயரும்.

அந்த இரண்டாம் கட்டப்பரவல் தற்போது நாம் எதிர்கொண்டிருப்பதை விட அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். நாம் முறையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டால் இரண்டாம் கட்டப் பாதிப்பை குறைந்த அளவாவது தடுக்க முடியும் என அந்த அறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவரான பேராசிரியர் ஸ்டீபன் ஹோல்கேட் தெரிவித்துள்ளார்;.

பிரித்தானியாவில் இதுவரையில் 2.9 லட்சம் பேர் அளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 44,830 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரிக்கும்போது மருத்துவமனைகள் நிரம்பி விடுவதற்கான அபாயம் உள்ளதனால் தற்போதே அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் #பிரித்தானியா #குளிர்கால #கொரோனா #சுகாதார

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.