இலங்கை பிரதான செய்திகள்

கொரோனா தொடர்பான உண்மையான தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை

கொரோனா தொற்று நோயாளர்கள் தற்போது அடையாளம் காணப்படுவதையும் நோய் பரவுவதையும் கவனத்திற்கொள்ளும்போது நிலைமை அன்று இருந்ததை விடவும் பாரதூரமானதாக உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொரோனா தொடர்பில் தற்போது எழுந்துள்ள நிலைமை குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று நடத்திய ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொது சுகாதாரம் தொடர்பில் ஆபத்தான நிலையில் நாம் உள்ளோம். சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் எடுக்கும் சரியான தீர்மானங்களிலேயே எதிர்கால நிலை தங்கியுள்ளது. அதற்கு தேவையான அரசியல் ஒத்துழைப்பு கிடைத்துள்ள தருணத்தில், சுகாதார அமைச்சு சரியான தீர்மானங்களை மேற்கொள்ளாவிட்டால் இந்த நிலைமை பாரதூரமாக அமையலாம். எனவே தொழில்நுட்ப தீர்மானங்களை எடுக்கும் குழுவினர் அடிக்கடி கூடி இது தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என ஷெனால் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஒவ்வொரு மாகாணங்களிலும் நிலவும் அபாயம் மாறுபட்டதாகும். சிறு பிரிவுகளைத் தடுக்க பிராந்திய முடக்கத்தை மேற்கொள்ள முடியும். அவ்வாறு செய்தால் அதன் தாக்கம் குறைவடையும். தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொண்டால் நாட்டிற்கே இதன்மூலம் ஏற்படுகின்ற தாக்கத்தை தவிர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று தொடர்பில் தவறான கருத்துக்கள் சமூகமயப்படுத்தப்படுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் நவீன் டி சில்வா தவறான கருத்துக்கள் பரவுவது இரண்டாம் அலை ஏற்படுவதைத் தடுப்பதற்கு தடையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தகவல்களை வழங்கும் தரப்பினர் ஊடகங்களுக்கு சரியான தகவல்களை வழங்காததால், பிழையான தகவல்கள் சமூகமயப்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #கொரோனா #உண்மையான #பாரதூரமானதாக #அரசவைத்தியஅதிகாரிகள்சங்கம்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.