203
இலங்கை கடற்படையின் 24ஆவது கடற்படை தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.
தனது கடமையை பொறுப்பேற்றதன் பின்னர் கடற்படை தளபதி உத்தியோகப்பூர்வமாக இன்று (2020.07.17) முற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்தார்.
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான நிஷாந்த உலுகேதென்ன புதிய பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் கடற்படையின் தலைமை பணியாளராக பணியாற்றி வந்தார். #கடற்படைதளபதி #பிரதமர் #நிஷாந்தஉலுகேதென்ன #மகிந்த
Spread the love