கடந்த மே மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணிவந்த 35 பேர் நாட்டில் பல்வேறு பகுதிகளில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் இருவர் அடங்குவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 30 குழுக்கள் இயங்கிவருவதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இந்த குழுக்களின் பெரும்பாலான உறுப்பினர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படை மற்றும் மேல் மாகாண குற்ற விசாரணை பிரிவினர் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.