கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் “போர்க்கால அவசரநிலை” அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக 17 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று சனிக்கிழமை (18.07.20) அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதாகக் கருதப்படும் நிலையில், அந்த நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பு பெப்ரவரி – மார்ச் மாதத்துக்குப் பின் பெரியளவில் அதிகரிக்கவில்லை.
இதன் காரணமாக, கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு உள்ளிட்டவற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 20 நாடுகளில் கூட சீனா இடம்பெறவில்லை என்பது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவின்படி, சீனாவில் இதுவரை 85,000க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது, 4,600 பேர் உயிரிழந்துள்ளனர்

