190
நுகேகொடை மேம்பாலத்தில் இன்று (20) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு இராணுவ சிப்பாய்கள் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . தனியார் பேருந்துடன் இராணுவ கப் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பனாகொடை இராணுவ முகாமைச் சேர்ந்த கப் வாகனத்தில் சாரதியாக பணியாற்றி ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பேருந்துசாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். #நுகேகொடை #விபத்து #இராணுவசிப்பாய்
Spread the love