முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெள்ளை வானில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை , அவர்களைக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு வழக்கினை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளமையினால் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை வழக்கை ஒத்திவைப்பது சிறந்தது என சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையாகிய அரச சட்டத்தரணி ஜனக்க பண்டார நீதிபதிகளுக்கு அறிவித்திருந்த நிலையிலேயே வழக்கு ஒத்திவைக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது #இளைஞர்கள் #கடத்தப்பட்டமை #வசந்தகரன்னாகொட #வழக்கு #ஒத்தவைப்பு