Home உலகம்அமெரிக்காவில் சீனாவுக்காக உளவு பார்த்ததாக சிங்கப்பூர் பிரஜை கைது

அமெரிக்காவில் சீனாவுக்காக உளவு பார்த்ததாக சிங்கப்பூர் பிரஜை கைது

by admin


அமெரிக்காவில் சீனாவுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் சிங்கப்பூர் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜுன் வீ இயோ எனும் குறித்த நபர் உளவு பார்த்ததான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள அவரது அரசியல் ஆலோசனை மையம் மூலம் சீன உளவு அமைப்புக்காகத் தகவல்களைத் திரட்டினார் எனக் குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்கா, சீன ராணுவத்துடன் தொடர்புடைய மற்றொரு ஆய்வு மாணவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை அமெரிக்கா தனது நாட்டிலுள்ள சீன தூதரகத்தை மூட உத்தரவிட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவின் செங்டு நகரிலுள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுமாறு சீன அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #அமெரிக்கா  #சீனா #சிங்கப்பூர் #கைது #உளவு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More